பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 தமிழ்க் காப்பியங்கள்

அவ்வகத்தியத்தில் நாடகத் தமிழிலக்கணம் கூறப் படும் இடத்திலன்றிச் செய்யுளிலக்கணம் கூறும் பகுதியி லும் காப்பியத்துக்குரிய இலக்கணங்கள் அமைந்திருத்தல் வேண்டும், அகத்தியத்தில் மிக விரிவாகச் செய்யுளிலக் கணம் கூறப்பட்டிருந்த தென்பது, செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்து கிடந்ததன (தொல். மரபு. 95, பேர்.) என்னும் பேராசிரியர் கூற்ருல் வெளிப்படுகின்றது.

இப்பொழுது அகத்தியம் கிடைத்தலின்மையின் காப்பியத்தின் இலக்கணங்களாக அதிற் கண்ட செய்தி களும் அறிதற்கு இயலாவாயின.

பிற நாடகத் தமிழ் நூல்கள்

தனியே நாடகத் தமிழுக்கு இலக்கணம் வகுத்த

நூல்கள் பல, தமிழிலே இருந்தன. வர வர நாட்கத் தமிழ் வழக்கு இந்நாட்டில் அருகியமையின் அதற்குரிய இலக்கணங்களும் மறைந்தன. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரவுரையில், நாடகத் தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலாகவுள்ள தொன்னூல்களும் இறந்தன. பின்னும் முறுவல், சயந்தம், குண நூல், செயிற்றியம் என்பவனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காளுமையின், அவையும் இறந்தன போலும் (உரைப் பாயிரம்) என இரங்குமுகத்தாற் சில நூற்பெயர்களை வெளியிடுகின்ருர். அவர் சிலப்பதிகாரத்துக்கு உரை இயற்றுதற்குத் துணை யாக இருந்த நாடகத் தமிழ் நூல்கள் பரதசேபைதீயம், மதிவாணர் நாடகத்தமிழ்நூல் என்பன. அவையும் இக்காலத்திற் கிடைத்தில."

1. அகத்தியத்தைப்பற்றிய வேறு சில செய்திகளே, கண்ணித் தமிழ்" என்ற நூலில் எழுதியிருக்கிறேன். -

2. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப. 58.