பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 25

"இனி அவற்றைப் பொருளுறுப்பென்பதல்லது அணியென்பவாயின், சாத்தனையும் சாத்தளுல் அணி யப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும் வேறு கண்டாற்போல அவ்வணியுஞ் செய்யுளின் வேருகல் வேண்டுமென்பது.

'இனிச் செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாம் கூருது சிலவே கூறி ஒழியின் அது குன்றக் கூறலாமென்பது.' -

தொல்காப்பியம் செய்யுளின் இலக்கணத்தை உரைக்கும் தமிழ் நூல் கள் மிகப் பல. அகத்தியத்தின் செய்யுளிலக்கணப் பகுதி மிக விரிந்திருந்ததென்பது முன்னர்க் கூறப்பட்டது.

அகத்தியத்தின் பின்னர் எழுந்த நூல்களுள் தலைமை பெற்றது தொல்காப்பியம். அகத்தியத்தின் வழி நூலாகவே அதனைக் கருதுவர். தொல்காப்பியத்தின் சிறந்த அமைப்பே பிற்காலத்தில் அகத்தியம் வழக் கொழிந்து வீழ்வதற்குரிய காரணமென்று கருதுவாரும் உளர்."

தொல்காப்பியம் அகத்தியத்தின் பின்னர் உண்டா கிய நூல்களுள் தலைமை பெற்றதென்பது, அகத்தியர் வழித் தோன்றிய ஆசிரியர் எல்லாருள்ளும் தொல் காப்பியனரே தலைவரென்பது எல்லா ஆசிரியூரும் கூறுப வென்பது (தொல். மரபு.94, உரை) என்னும் ம்ேராசிரியர் கூற்ருலும்,

"மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத் தென்மலை யிருந்த சீர்சால் முனிவரன் தன்பால் தண்டமிழ் தாவின் றுணர்ந்த

1. தொல், உவம. 37, உரை. 2. ராவ் ஸ்ாஹெப் மு. இராகவையங்கார் : தொல் காப்பியம் பொரு :ளதிகார ஆராய்ச்சி, ப. 2. - -