பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தமிழ்க் காப்பியங்கள்

துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த”

- (புறப்பொருள் வெண்பாமாலை, சிறப்.) என்பதன் கண் அகத்தியர் மாளுக்கர் பன்னிருவருள் தொல்காப்பியரை முதலில் வைத்துக் கூறும் முறை யினுலும் விளங்கும். -

தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் முழுவதும் ஒரு வகையில் காப்பிய இலக்கணத்தைப் புலப்படுத்துவதே. யாகும். அவ்வதிகாரத்திற் சிறப்பாக, மெய்ப்பாட்டியல், உவமவியல், செய்யுளியல் என்பனவற்றில் உள்ள பல செய்திகள் காப்பியப் பொருள்வரையறை செய்யப் பெரிதும் பயன்படுவன. காப்பியச் சுவைகளோடு தொடர்புடைய செய்திகளை மெய்ப்பாட்டியலும், காப்பிய அலங்காரங்களோடு இயைபுடையவற்றை £2–6) sis) இயலும், காப்பிய வகை, காப்பிய நடையாகியவற்றைச் செய்யுளியலில் வனப்பு, வண்ண மென்னும் செய்யுள் உறுப்புக்களைக் கூறும் பகுதிகளும் வகுக்கின்றன. அவை பின்னர் ஆராயப்படும். மரபியலிலும், இன்ன பொருளை இன்ன சொல்லால் கூறுக வென்னும் தொல்லோர் ஆட்சி வரையறையும் ஒரு வகையில் காப்பியத்துக்குப் பயன்படுவதே யாகும்.

அன்றியும் நூற்குக் கிளந்த ஈரைங் குற்றமும், அவற்றை எதிர் மறுத்து உணரும் திறத்தனவாகிய குணங்களும் காப்பியங்களுக்கும் ஏற்புடையனவே யாம். வடமொழி', தென்மொழி யிலக்கணங்களுள் குணமுங். குற்றமும் தனித்தனியே ஆராயப்படுகின்றன. நுதலிய தறிதல் முதலியனவாகக் கூறப்படும் முப்பத்திரண்டு. உத்திகளும் காப்பிய அலங்காரங்களைப் போன்றனவே

[LJfTİ Ü, . . - -

1. தொல், மரபு. 108, 2. டிெ. டிெ. 109. 3. Naiyasastra of Bharata, ch. XVI. 4. Qasr si, uogų. 110.