பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழ்க் காப்பியங்கள்

என்னும் மேற்கோளை நோக்குகையில் அம்மாபுராணம் பண்டைக் காலத்தில் பெரிதும் போற்றப் பெற்று வந்த நூலென்பது விளங்கும்.

மாபுராணத்தில் ஒவ்வோர் இலக்கணப் பகுதியும் மிக விரிவாக ஆராயப்பட்டதென்பது, யாப்பருங்கல விருத்தி யுரை யாசிரியர் அங்கங்கே உரைக்கும் உரைப் பகுதி களால் தெரிய வருகின்றது.

அவிநயம்

அவிநயம் என்றபேரிலக்கணத்தினின்று யாப்பருங் கல விருத்தியுரையிற் பல சூத்திரங்கள் காட்டப்படு கின்றன. நன்னூல் மயிலைநாதர் உரையிலிருந்து, இதற். குத் தண்டலங் கிழவன் இராச பவித்திரப் பல்லவதரைய னென்பவர் உரையெழுதி யிருப்பதாகத் தெரிய வரு கின்றது. இது தொல்காப்பியத்திற்கும் முந்தினதென்பர் சிலர்."

இதண்கண் உள்ள யாப்பதிகாரம் மிக விரிவான தாகவே இருக்குமென்று தோற்றுகின்றது. இவ்யாப்பதி காரத்திற்குப் புறநடையாக நாலடி நாற்பதென்ற நூலொன்றுண்டு. அதிலிருந்த வெண்பாக்கள் சில யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக வருகின்றன.

பல்காப்பியம் தொல்காப்பியர் காலத்தே தனியாகச் செய்யுளிலக் கணத்தைச் சில ஆசிரியர்கள் இயற்றினர்கள். அவருள் பல்காப்பியனர் என்பவர் ஒருவர். -

1. சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும், ப. 30. 2. யாப்பருங்கலக் காரிகை, 1, உரை.