பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் + 29

'தொல்காப்பியம் கிடப்பப் பல்காப்பியனுர் முத லியோர் நூல் செய்தது எற்றுக்கெனின், அவரும் அவர் செய்த எழுத்தும் சொல்லும் பொருளுமெல்லாம் செய் திலர், செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்து கிடந்த தனை இவ்வாசிரியர் சுருங்கச் செய்தலின் அருமை நோக்கிப் பகுத்துக் கூறினராகலானும் அவர் தந்திரத்துக் கேற்ப முதனூலோடு பொருந்த நூல் செய்தாரா கலானும் (தொல். மரபு. 95, பேர்.) என்னும் பேராசிரியர் உரையால் பல்காப்பியம், செய்யு ளிலக்கணம் மட்டும் கூறுவதென்பதும், தொல்காப்பியத்துக்கு வழி நூல் என் பதும் பெறப்படும்.

பல்காப்பியத்தின் புறநடைச் சூத்திரம் - பேராசிரியரால் எடுத்தாளப்படுகின்றது. அது வரும் து:

“கூறிய குன்றினும் முதனுகல் கூட்டித்

தோமின் றுணர்தல் தொல் காப் பியன்றன் ஆணையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே.”

பல்காயம்

தொல்காப்பியத்தின் வழிவந்த யாப்பு நூல்களுள் இதுவும் ஒன்று. தொல்காப்பியத்தில் விரித்துக் கூறப் பட்ட இலக்கணங்கள் பல்காயரைால் பகுத்து உரைக்கப் பட்டன. அவை காக்கைபாடினியாரால் பிறகு தொகுத்து உரைக்கப்பட்டன.

தொல்காப் பியப்புலவோர் தோன்ற விரித்துரைத்தார்

பல்காய ஞர்பகுத்துப் பன்னிஞர்-நல்யாப்புக் கற்ருர் மதிக்கும் கலைக்காக்கை பாடினியார் சொற்ருர்தம் நூலுட் டொகுத்து’’’

1. பா. வி. ப. 20.