பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழ்க் காப்பியங்கள்

ஒருவகைக் கொள்கையே தமிழ் நாட்டில் நிலையுறுவதா யிற்று. தளையிலக்கணம் கொள்ளப்பட்டது. கட்டளையடி மறைந்து போயிற்று. பாக்களே விடப் பாவினங்கள் கவிஞர்களால் மிகுதியாக மேற்கொள்ளப்பட்டன. பல வகைச் சந்தங்களை அமைத்து விருத்தங்கள் பாடத் தொடங்கினர்.

இந்த வகையில் யாப்பின் மரபை வரையறுத்த நூல்களுட் சிறந்தது அமுதசாகர முனிவர் இயற்றிய யாப்பருங்கல மாகும்.அவ் யாப்பருங்கலத்துக்குப் புறனடை யாக அவரே யாப்பருங்கலக் காரிகையை இயற்றினர். அது யாப்பருங்கலத்தைக் காட்டினும் சிறந்ததாகத் தமிழ் நாட்டாரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமுத சாகரர் காரிகை இயற்றியதற்காகக் குளத்து ரென்னும் ஊரை அரசன் அளித்தான். அதுமுதல் அவ்வூர் காரிகைக் குளத்துாரென்றே வழங்கலாயிற்று.

யாப்பருங்கலத்துக்கு ஒரு பழைய விருத்தி உரை உண்டு. அதன்கண் கூறப்பட்ட செய்திகள் மிக அருமை. யானவை. பல பழைய சூத்திரங்களும் நூற்செய்யுட் களும் அவ்வுரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டிருக் கின்றன. அதனுல் பழைய காலத்து நூற்பெயர்களும், தமிழின் விரிவும் விளங்குகின்றன.

யாப்பருங்கலத்தின் இறுதிச் சூத்திரம் மாலை மாற்று முதலிய சொல்லணிகளையும் உருவகமாதி விரவிய லிருக வுள்ள அலங்காரங்களையும் பிறவற்றையும் தொகுத்துக் கூறுகின்றது, அச்சூத்திரத்தின் உரையில் உரையாசிரி யர் அதன்கண் உள்ளவற்றை விளக்கியிருக்கின்ருர். காப்பிய அலங்காரங்களைப்பற்றிய செய்திகளும் பிறவும் அவ்வுரைப் பகுதியிலே காணலாம். -