பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 தமிழ்க் காப்பியங்கள்

அணியதிகாரம் என்ற பெயரே முற்காலத்தில் வழங்கி யிருக்குமென்று தோற்றுகின்றது. அணியதிகாரமென்பது ஒரதிகாரப் பெயராதலின் அதனை நூலின் பெயராக உரைத்தல் பொருந்தாத்ெணில், இறையனர் களவியிலைப் பொருளதிகாரம் என்று சில உரையாசிரியர்' வழங்கு வதல்ை முழு நூலையும் அங்ங்னம் வழங்குதல் பொருந்து மென்றே கொள்க. கணக்கதிகாரம் என்ற நூற் பெயரையும் காண்க. இவ்வாறே நூல் உறுப்புக்குரிய பெயராலே சில நூல்கள் பெயருடையவாதலைப் பன்னிரு படலம், பன்னிரு பாட்டியல், தாளவகை. யோத்து என்னும் நூற்பெயர் வழக்கால் அறிக.

தண்டியலங்காரத்தைத் தமிழ் நாட்டினர் பெரிதும் பாராட்டியதற்கு அந் நூலாசிரியர் வடநூலாசிரியர் பெய ராலே வழங்கப்பட்டமையே ஓர் அடையாளமாகும். பிற். காலத்தில் நூல் இயற்றிய இலக்கண விளக்க ஆசிரியர் தம் நூலில் தண்டியலங்காரச் சூத்திரங்களை அப்படி யப்படியே அமைத்துக்கொண்டார். தண்டியலங்கார மேற்கோட் செய்யுட்கள் பலவற்றை வீரசோழிய உரை யாசிரியர் எடுத்து உதாரணம் காட்டினர். இவை தண்டி யாசிரியர் சிறப்பை விளக்குகின்றன. -

மாறன் அலங்காரம்

தண்டியலங்கார நூலைப் பெரும்பாலும் பின்பற்றியும், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களிற் கண்ட பல செய்திகளை அமைத்தும், இலக்கியத்திற்காணும் பொருள் களை ஒர்ந்தும் பழைய அணிகளோடு சில புதிய அணிகளை யமைத்து இயற்றப்பட்டது மாறனலங்காரம். காப்பிய இலக்கணத்தை இந்நூல் விரிவாகக் கூறுகின்றது.

1. தக்கயாகப் பரணி, உரை.