பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பிய இலக்கண நூல்கள் 6}.

யர் பெயரால் வெவ்வேறு பாட்டியல் நூல்கள் சில நூற் ருண்டுகளுக்கு முன் வரையில் வழங்கி வந்தன என்ற செய்தியை இந்த மேற்கோள்களால் தெரிந்து கொள்ளலாம்.

அன்றியும், அந்த நூல்களின் பெயர்களைப் பார்க்கை யில் கலாவியல், தூக்கியல், கவித்தொகை என்பன பாட் டியல் என்பதன் பரியாய நாமங்கள் என்று நினைக்க இடம் உண்டு. - -

மேலே சொன்ன மேற்கோள் நூல்களின் ஆசிரியர் களில் இந்திரகாளியார், அவிநயனர், அகத்தியர், கல்லாடனர் என்பவர்களின் பெயரால் அமைந்த சூத்திரங்கள் பன்னிரு பாட்டியலிலும் உள்ளன.

சிதம்பரப் பாட்டியல்

இந்நூல் பதிருைம் நூற்றண்டில் வாழ்ந்திருந்த புராணத் திருமலைநாத ரென்னும் புலவருடைய குமார் ராகிய பரஞ்சோதி யென்பவரால் இயற்றப்பெற்றது. இந்நூலாசிரியருடைய தந்தையார் சில காலம் சிதம்பரத் தில் இருந்து சிதம்பர புராணம் முதலிய நூல்களை இயற்றினர். அக்காலத்தில் இவரும் சிதம்பரத்திலே வாழ்ந்திருந்தார் போலும். அன்றி இவருடைய ஊரே சிதம்பரமாதலுங்கூடும். சிதம்பரத்திலே இயற்றப்பட்ட மையாலும்,

'பூமேவு திசைமுகனுஞ் செங்கனெடு மாலும்

புத்தேளிர் கணங்களுமா தவத்தோரும் போற்றத்

தேமேவு குழலுமையாள் கண்டுவப்ப மன்றில்

திருநடஞ்செய் பேரொளியைச் சிந்தைதனில் வைத்து' எனத் தொடங்குவதலுைம் இது சிதம்பரப் பாட்டிய லென்னும் பெயருடையதாயிற்று.

1. சொக்கதாதருலா, முகவுரை.