பக்கம்:தமிழ்க் காப்பியங்கள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Win

பெரிய புத்தகமாகிவிடும். ஆதலின் காப்பிய இலக்கியங் களில் பொதுவாக எத்தகைய வளர்ச்சி நாளடைவில் உண்டாயிற்று என்பதை மாத்திரம் ஒருவாறு காட்ட முயன் றுள்ளேன். ஐம்பெருங் காப்பியங்களென்னும் வழக்குப் பிற்காலத்ததென்பதும் அத் தொகுப்பு எவ்வகை ஒப்புமை யையும் கருதி அமைக்கப்பட்டதன்றென்பதும் என் கருத்து. இதனை இப்பகுதியில் கூறியுள்ளேன்.

"இந்த ஆராய்ச்சி கிரம்பிய தன்று; பல குறைகளே யுடையது; பல வேறுபட்ட கருத்துக்களுக்கு இடமளிப்பது' என்பதை நான் உணர்கின்றேன்; ஆயினும் இத்துறையில் முதல் முறையாக இதனைச் செய்யத் துணிந்தேனென்ற கருத்தே அந்த உணர்ச்சிக்கிடையே ஓர் ஆறுதல் அளிக் கின்றது.

'கடல்கண் டோமென்பர் யாவரே முடிவுறக் கண்டார்.”

என்னுடைய ஆராய்ச்சிக்கு நெறி வகுத்துதவி அவ்வப் போது நான் நூல்களே ஆராய்ந்து செய்திகளைத் தொகுக்க வேண்டிய முறையை உரைத்து நான் எழுதுவனவற்றைக் கண்காண்பித்துத் திருத்தங்கள் செய்து இக்கட்டுரை நிறைவேறிய காலத்துப் பார்வையிட்டு ஆசீர்வதித்தருளிய என் ஆசிரியப் பெருமானகிய பிரம்மபூரீ மகா மகோபாத்தி யாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களுக்கு நன்றி கூற என் உள்ளம் முந்துகின்றது. ஆயினும் உள்ளத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இக் கட்டுரையில் அறிவின் கூறுபாடு எங்கெங்கே இருப்பதாகத் தோன்று கிறதோ அவை யாவும் அவர்கள் அளித்த பிச்சை; ஏனையவை என் பேதைமையின் விளைவுகள்.