srບໍ່ທີມ இலக்கணங்கள் 81
புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல் வழியின்றித் தானே தோற்றுவித்தல்" -
என்பர். விருந்து என்பது புதியவாயினவற்றின் மேற்று. அவை இப்பொழுதுள்ளாரைப் பாடும் பாட்டு' என்பது யாப்பருங்கல விருத்தியுரையாசிரியர் கூறுவது.
இங்ங்னம் உரை கூறப்படினும், விருந்தென்பது புதிய கதையைப் புனைந்துரைத்த செய்யுளின் மேற்று' என்று உரைகோடலே பொருத்தமாகும். பழங்கதை அமைந்த காப்பியங்களுக்கு வகை கூறியவர், அவற்ருேடு ஒத்த இனமாகிய புதுக் கதை அமைந்த காப்பியங் களுக்கும் வகை கூறவேண்டுமன்ருே? புதுமைக் கதை களை இக்காலத்தில் புதியனவென்னும் பொருள் தரும் 'நாவல் (Novel) என்னும் பெயரால் ஆங்கிலத்தில் குறிக்கின்றர்கள். விருந்தென்பது அப்புதுமையைக் குறிப்பதாகக் கொள்ளுவதால் குறை என்ன?
"அங்ங்ணமாயின் உரையாசிரியர்கள் அத்தகைய நூல்களை உதாரணமாகக் காட்டியிருப்பார்க ளன்ருே?" என்ற வின எழலாம். உரையாசிரியர்கள் தம் காலத்தே வழங்கி வந்தவற்றைமட்டும் உதாரணமாகக் காட்டிப் போதுகின்றனர்; ஏனையவற்றை உதாரணங்கள் உள வேற் கண்டு கொள்க' என்றேனும், இவை அக்காலத்து உளபோலும் என்றேனும் கூறிச் செல்கின்றனர். இதல்ை, உரையாசிரியர்களது காலத்தில் புதுக் கதை களையுடைய காப்பியங்கள் வழக்கில் இல்லாமையே அங்ங்ணம் உதாரணம் காட்டாமைக்குக் காரணம் என்று கொள்ளவேண்டும். . .
புதிய புதிய 5605ఉ&r வைத்துப் புதிய புதிய காப் பியங்களை அமைக்கும் வழக்கு மற்ற மொழிகளில் விரி
த. கா-6 - -