பக்கம்:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 பொருள் நூலிலும் குறிப்பிட்ட இச்செய்தி களால், வான்மீகத்தில் குறிக்கப்படும் கபாடம் என்பது கோட்டைக் கதவினையே குறிக்குமென் றும் பின்பு அது ஆகுபெயராகப் பாண்டியனது நகரத்தைக் குறிக்குமென்றும், கபாடபுரம் என்ற நகரமே பாண்டியருக்கு இருந்ததில்லை யென்றும் கூறுவார் கூற்றுப் பொருந்தாதே யாகும். கடல்கோள் : முதற் சங்கம், இடைச் சங்கம் என்பன இருந்ததில்லை என்று கூறுவார், அச்சங் கங்கள் இருந்த நகரினைக் கடல் கொண்டது என் னும் வரலாற்றினையும் ஏற்றுக்கொள்ளார் என் பது வெளிப்படை பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழகப் பெருநிலத்தின் கோடி சூப்பிரிக் காக் கண்டத்துடன் இணைந்திருந்ததென்றும் பீன்பு அளக்கமுடியாத அப்பேரூழியில் நிகழ்ந்த ஒரு பெருங்கடல் கோளால் அப்பெரு நிலப் பகுதி முழுவதும் பெருங்கடற் பகுதியாய் மாறி விட்டதென்றும், அக்கடற் பகுதியை ஆராய்ந்து கண்ட பௌதிக நூல் வல்லாராகிய ஹேக்கல் முதலிய மேலை நாட்டுப் பேராசிரியர்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். அப்பேரூழியில் நடந்த கடல் கோளில் அழிந்த பெருநிலப்பரப் பினை இலெமூரியாக் கண்டம் என்பர். தமிழ் நூல்களில் கூறப்படும் கடல்கோள் அதனினும் பிற்பட்டதாகும். இக்கடல்கோள்களும் இருமுறை நடந்ததாகக் கருதுவது பொருந்தும். முதலில் நிகழ்ந்த சிறு கடல் கோளால் தலைச் சங்கம் இருந்த தென் மதுரை மட்டும் அழிய, இரண்டாவது நிகழ்ந்த பெருங்கடல் கோளால் தமிழ் நீலப் பகுதியும் கபாடமும் குமரியாறுவரை அழிந்தன. இக்கடல் கோள்கள் பற்றிய குறிப்புக்கள் கடைச் சங்க நூல்களுள் காணப்படுகின்றன. தொகை நூல்களுள் கற்றறிந்தார் ஏத்தும் கலி யென்று புகழப்பட்ட கலித் தொகையில், 'மலிதிரை யூர்ந்துதன் மண்கடல் வௌவலின் மெலிவின்றி மேற்சென்று மேவார் புலியோடு வின்னிக்கிப் புகழ்பொறித்த நாடிடம்படப் கிளர்கெண்டை வலியினான்வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்" (கலித்.104-1--4) என்னும் பாடவில் பாண்டியன் தன் நாட்டினைக் கடல் வவ்விக் கொண்டமையின், அக்குறையினை நிரப்பக் கோழனோடும் சேரனோடும் பொருது, அவர்கள் நாட்டின் கல பகுதிகண்த் தன் காட் மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன் வழ டுடன் சேர்த்துக்கொண்டனன் என்று கூறப்பட் டுள்ளது. பஃறுளி யாறும், பல மலைகளும், குமரி யாறும், கடல் கொண்ட செய்தியைச் சிலப்பதி காரமும், 'வடிவே லெறிந்த வான்பகை பொறாது பஃறுனி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள" (சிலப். காடுகாண்.18,20) என்று அறிவிக்கின்றது. "நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவ மும்" என்ற சிலப்பதிகார வேனிற் காதை அடி யில் அடியார்க்கு நல்லார், நிலந்தரு திருவிற் பாண் டியன் காலத்துப் பாண்டிய நாட்டுத் தென் திசையில் நாற்பத்தொன்பது நாடுகள் கடல் கோளால் அழிந்த செய்தியை மிக விரிவாக எடுத் துரைத்துள்ளார். மேற்காட்டிய இச்சான்று களால் கடைச்சங்க காலத்துப் புலவர் பெருமக் களும், உரையாசிரியர்களும், பண்டைத் தமிழ் கக் கடல் கோளைப் பற்றி நன்கு அறிந்திருந்தனர் என்பது பெறப்படும். இங்ஙனம் பண்டைய இலக்கண இலக்கியங்களாலும், உரைகளாலும் அறியப்படும் கடல் கோளைப் பற்றி ஒரு சாரார் ஐயுற்றுக் கூறுவதெல்லாம் தமிழ் நாட்டின் பழமை, தமிழ் இலக்கியத்தின் பழமை, தமிழரு டைய நாகரிக முதிர்ச்சி ஆகிய இவற்றை யெல் லாம் பிற்பட வைக்க வேண்டுமென்ற அவர் களது குறுகிய நோக்கத்தினாலேயே போலும்! மூன்றாம் சங்கம்: இடைச் சங்கம் இருந்த கபாடபுரம் அழிந்த பின்னர் அச்சங்கத் திறுதிக் கண்ணிருந்த முடத் திருமாறன் என்பான் கூடல் என்னும் இம்மதுரைக்கண் மூன்றாம் சங்கத்தை நிறுவினான் என்பது முன்னரே கூறப்பட்டது. பாண்டியர் நிறுவிய இக்கல்விக் கழக நிகழ்ச்சி யிலும் ஒரு சில அறிஞர் ஐயமுற்றுப் பல்லாண்டு கட்கு முன்னிருந்தே எழுதி வந்துள்ளனர். இவர் களது ஐயப்பாடு தவறானது என்பதை எடுத்துக் காட்டுதற்குரிய உரமுடைய சான்றுகள் பல உள என்பதனைத் தமிழிலக்கிய ஆராய்ச்சிமிக்க அறிஞர் யாவரும் நன்கறிவர். சைவ வைணவ சமயப் பெரியோர்களின் வாக்குகளிலும் சங்கத் தொகை நூல்களிலும் ஆங்காங்கு ஐயமஉ இம் மூன்றாம் சங்கத்தைப் பற்றிய செய்திகள் சுட் டப்பட்டுள்ளன. இவ்வுயர் மதிற் கூடலில் இயற்றமிழ்ச் சங்கமும், இசைத் தமிழ்ச் சங்க மும் இருந்த உண்மையை வாதவூர் அடிகளாம் மாணிக்கவாசகர், சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தை யுள்ளும்