பக்கம்:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைத் தமிழ்ச்சங்கப் பொன் விழா மலர் உறைவான் உயர்மதிற் கூடலி னாய்ந்த. வொண்டீந் தமிழின். துறைவாய் நுழைந்தனை யோ அன்றி ஏழிசைச் சூழல் புக்கோ" என்று திருக்கோவையாருள் குறிப்பிடுகின்றார். 51 இற்றைக்கு ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த திருநாவுக்கரசரி "நன்பாட்டுப் புலவனாய்ச் சங்க மேறி நற்கனகக்கிழி தருமிக் கருளினோன் காண் என்ற தம் பாடலின் அடி களில் சங்கமிருந்த செய்தியைக் குறிப்பிடுகின் றார். வைணவ சமயப் பெரியாராகிய திருமங்கை யாழ்வார், 'கலியன் சொன்ன சங்கத் தமிழ் மாலை பத்தும் என்று தமிழைச் சங்கத் தமி ழாகவே கூறுகின்றார். force here, we can att நமக்கு மிகவும் நெடுங் காலத்திற்கு முன்னர் இருந்த இப்பெரியார்களது வாக்கில் பயின்றிருக் கும் இச்சங்கச் செய்தி எத்துணை வலியுடையதாய் இருக்குமென்பது கூறாமலே விளங்கக் கூடியது. GE "6 FI மேலும் இம்மூன்றாம் சங்கம் இக்கூடல் மாநக ரின்கண் நிலவியிருந்த வரலாற்றுண்மையை இச் சங்கத் தொகை நூல்கள் பலவும் ஆங்காங்குகி குறிப்பிடுகின்றன். சிறுபாணாற்றுப் படை மதுரை யைப் பற்றிக் கூறுமிடத்து, தமிழ் நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை' என்று குறிப்பிடுகின்றது. தமிழ் நிலைபெற்ற என் பதில் தமிழ் மொழி நிலை பெற்றிருந்ததென்னும் பொருள் தருவதன்றித் தமிழ் நிலையம் என்னும் சங்கத்தின் பெயரே தமிழ் நிலை என்று குறை யாக நின்றதெனப் பொருள் கொள்ளவும் இட மிருத்தல் காண்க. தமிழ்கெழு கூடல் தண் கோல் வேந்தே", என்று புறநானூற்றிலும், தமிழ் வையைத் தண்ணம் புனல் என்று பரி பாடலிலும், தென் தமிழ் மதுரைச் செழுங்கலைப் பாவாய்", என மணிமேகலையிலும், இம்மதுரை யைக் கூறுமிடமெல்லாம் தமிழோடு இணைத்தே கூறுவது அதன்கண் தமிழ்ச் சங்கம் இருந்த பெருமை பற்றியேயாம். அன்றியும் மனூர்ச் செப்பேட்டில், "மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் '>எனப் பாண்டியன் மெய்க்கீரத்தியில் இம்மதுரைச் சங் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் இம் மதுரையில் மூன்றாம் சங்கம் நிறுவப்பட்டிருந்த உண்மையைப் புலப்படுத்துதற்குரிய சான்றுகள் எத்துணையோ உள. அவை யெல்லாம் ஈண்டு உரைப்பிடைபெருகும். சின்ன கம் சங்கம் என்னும் பெயர் : இனி, சங்கம் என் னும் சொல் வடசொல் என்றும், அங்ஙனமாயின் 2,1 தமிழ்ச் சங்கத்தைக் குறிக்க வழங்கிய சொற்கள் யாவை: என்றும் உசாவுவர் சிலர், அங்ஙனம் உசாவுவதற்குக் காரணம், சகர ஒற்று, அ,ஐ, ஔ, என்னும் மூவுயிரோடும் கூடி மொழிக்கு முதலில் தமிழ் மொழியில் வாராது என்று உரைக் கும். தொல்காப்பிய வீதி பற்றியேயாம். (எழுத்து; மொழி மரபு : சூத்; 62.) தொல்காப் பியர் காலத்து இச்சொல் வழக்கு இல்லாமை யால் சங்கம் என்ற பொருளில், கடைச்சங்க நூல் களில் காணப்படும் நிலையம், புணர்ப்பு, அவை, கழகம், கூடல் முதலிய சொற்கள் வழங்கியிருக் தக்கூடும். கடைச்சங்க நூல்களுள் சகரத்தை முதலாகக் கொண்ட சவட்டுதல், சமழ்ப்பு, சந்து முதலிய சொற்களும் வழங்கப்பெற்றுள்ளமை யின் அம்முறையில் பின்பு உண்டான தமிழ்ச் சொல்லே சங்கம் என்று கொள்ளினும் இழுக்கா காது. புலம்புரிச் சங்கம் பொருளொடு என்று மணிமேகலையாசிரியர் இச் முழங்க சொல்லை எடுத்தாண்டிருத்தல் காண்க. சங்க நூல்கள்: இம்மூன்று சங்கங்களின் வாயி லாகவும் வெளிவந்த நூல்கள் இவை யென்பதை முன்பு குறிப்பட்ட இறையனார் களவியலுரைப் பாயிரத்திலும், அடியார்க்கு நல்லார் முதலியோர் உரைகளிலும் காணலாகும். இவற்றுள் முதற் சங்கத்தெழுந்த நூல்களாகக் குறிக்கப்பட்ட வற்றுள் இப்பொழுது ஒன்றும் நமக்குக் கிடைத் திலது. அச்சங்க அகத்திய சூத்திரங்கள் ஒரு சில மட்டும் சில உரைகளிடையே காணப்படு தின்றன. இடைச் சங்கநூல்களுள் தொல்காப பியம் நீங்கலாக ஏனைய கலைகள் யாவும் அலைக ளுக் கிரையாயின, இந்நூல்கள் எல்லாம் அழிந் தொழிந்தமைக்கு ஒரு புலவர், "ஓரணம் உருவம் யோகம் இசைகணக்கு தாரண மறமே சந்தம் தம்பம் நீர்நிலம் இரதம் சாலம் உலோகம் மாரணம் பொருள் என்றின்ன வாரணம் கொண்ட தந்தோ வழிவழிப் மான நூல் பலவும் வாரி பெயரும் மாள என்று இரங்கிக் கூறியுள்ளார். இவைகளேயன்றிக் கடைச்சங்க-நூல்களுள் ளும் பல கலைகள் நாளடைவில் இறந்தொழிந் தன் என்று அறியப்படுகின்றது. அவற்றுள் காத லும் வீரமும் பொருளாகக் கொண்டு பாடியி அகப்பொருள் புறப்பொருள் பாட்டுக்கள் அடங்கிய தொகை நூல்களே இப்போது எஞ்சி