பக்கம்:தமிழ்ச்சங்க வரலாறு (இதழ்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 யுள்ளன. இத்தொகை நூல்களில் அடங்கிய பாடல்களின் எண்ணிக்கை 2426 - ஆகும். இவ் வருமைப் பழம் பாடல்களேனும் நமக்கு அழிந்து போகாமல் கிடைத்திருப்பது நமது நல் ஊழேயாகும். இவைகளேயன்றிக் காப்பியங்க ளாக இச்சங்க காலத்தின் பிற்பகுதியில் எழுந் தவை சுவைமிக்க சிலப்பதிகாரமும், மணி மேகலையும் ஆகும். இம் மதுரையின்கண் ஆயிரம் ஆயிரம் ஆண் டுகளாகத் திகழ்ந்திருந்த தமிழ்ச் சங்கமானது இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகட்கு முன்னர் இருந்த உக்கிரப் பெருவழுதியின் காலத் திற்குப் பின்னர் நின்று நிலவாது. மறைந் தொழிந்தது. அவனுக்குப் பின் வந்த பாண்டியர் கள் சங்கம் நிறுவித் தமிழை வளர்க்காது நெகிழ்ந்து போயினர். பின்பு ஐந்தாம் நூற் றாண்டில் புதிய சமயக் கொள்கைகளைத் தமிழ் நாட்டில் பரப்புவதற்கு எழுந்த சமணர்களும் பௌத்தர்களும் இம்மதுரையில் சங்கங்கள் நிறுவி, அவற்றின் வாயிலாக இலக்கணமும், அவர்களது சமயச் சார்பான கலைகளும் காப்பி யங்களுமாக வெளியிட்ட நூல்கள் பலப் பல வாம். பன்னூறாண்டுகள் மதுரையில் முறையில் வளர்ச்சி பெற்று வந்த தமிழ்மொழி, பின்னைய நூற்றாண்டுகளில் அரசியல் குழப்பங் களும் களப்பிரர் பல்லவர் முதலிய அந்நியர் ஆட்சியும் ஏற்பட்ட காலத்தில் புறக்கணிக்கப் அவைக்களங் பட்டது. அப்போது அரசரது களிலும் தனித்தும் இருந்த சில புலவர்கள் நூல் கன் பல இயற்றித் தமிழ் மொழியை வளம் படுத்தினார்கள். அந்நூல்களுள் சிறந்தவை, கம்ப இராமாயணம், பெரியபுராணம் முதலியன. பிற்காலத்தில் வடமொழிப் பிரபந்தங்களையும், புராணங்களையும் தழுவி எழுந்த சிறு நால்களும் புராணங்களுமே யல்லாது, மக்கட்குப் பயன் வெளிவர படும் சிறந்த முறையில் நூல்கள் வில்லை. இதனால் தமிழ் இலக்கியத்தின் போக் கும் அமைப்பும் வேறுபட்டன. இவற்றிற்குக் காரணம் இந்நூற்றாண்டிலிருந்த புலவர்கள் பண்டைத் தமிழ்நூல்களின் பயிற்சியும், ஆராய்ச் சியும் குன்றியவர்களாக இருந்ததே. தமிழ் மக்களது தனி மாண்பை அறிதற்குக் கருவியான சங்க இலக்கியப் பயிற்சி இங்ஙனம் நாட்டில் குன்றியதற்குக் காரணம், சைன, பெளித்த, சைவ, வைணவப் பெரியார்கள் இயற் றிய காப்பியம், புராணம், பிரபந்தங்கள் முத லான சமயச்சார்பான நூல்களும், நிகழ்ந்த சம் மதுரைத் தமிழ்ச் சஙகப் பொன் விழா மலர் யப் பூசல்களும், மக்களது உள்ளத்தில் உண் டாக்கிய ஒரு புதிய பெரும் புரட்சியேயாகும். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் வெளிவந்து பல் லாயிரம் ஆண்டுகள் வழக்கிலிருந்து, பின்னைய நூற்றாண்டுகளில் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிவரை, சிதல் வாய்பட்டுப் பழைய தமிழ்ப் புலவரி அகங்களில் தேடுவாரற்றுக் கிடந்த ஏடு களைத் தேடி எடுத்து, ஆய்ந்து அச்சிட்டு நம் முன்னோரது கலைச் செல்வங்களை மீண்டும் ஒரு வாறு நாம் பெறுமாறு செய்த பெருமை முதற் கண் காலஞ்சென்ற பெரியார்களான சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களுக்கும் மகாமகோ பாத்தியாய டாக்டர் உடவே. சுவாமிநாதையர் அவர்கட்கும், மதுரை நான்காம் சங்கம் நிறுவிய துங்கர் பாண்டித் துரைத்தேவர் அவர்கட்கும் உரியதாகும். இந்நூல்கள் வெளிவந்துள்ள இக் காலத்துப் பலர் இவற்றைக் கற்று, தமிழ் மொழியின் தனிநிலை, தமிழ்நூல்களின் சிறப் பியல்பு, தமிழர் நாகரிகம், அவர்களது உயரிய குறிக்கோள் முதலியவற்றை யெல்லாம் நன் கறிந்தவர்களாக விளங்குகின்றார்கள் யில் வள்ளலான நான்காம் தமிழ்ச்சங்கம்: மூன்றாம் தமிழ்ச் சங்கம் மறைந்த பன்னூறு ஆண்டுகளுக்குப் பின்னர் நான்காம் சங்கத்தை இம்மதுரையம்பதி நிறுவிய வண்மையாளர் காலஞ்சென்ற பாண்டித்துரைத் தேவராவர். இவர், தமிழ் பொன்னுச்சாமித் தேவரவர்களது அருமைப் புதல்வர். இவரது தோற்றம் 1887-ம் ஆண்டு மார்ச்சு 21 ம் நாள். பாஸ்கர சேதுபதி யவர்கள். தேவரவர்களது சிறிய தந்தையாரான முத்துராமலிங்க சேதுபதியின் குமாரராவர். இவ்விருவரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை யுடையவராய், ஒரு தமிழ்ச் செய்யுளின் நயத்தைப் பல மணிநேரம் பேரவை களில் இனிமையாக எடுத்துரைக்கும் சொல் லாற்றலுடையவர்களா யிருந்தனர். பாண்டித் துரைத் தேவரவர்கள் எப்பொழுதும் தமிழ்ப் பெரும் புலவர்கள் பலர் தம்மைச் சூழ அருங் கலை விநோதராய்த் திகழ்ந்து கொண்டிருந்தார். ஓரமயம் மதுரை மாநகருக்கு ஒரு சொற்பொழி வின் பொருட்டு அவர் வந்திருந்தபோது, சங்க மிருந்த துங்கம் வாய்ந்த மதுரைமா நகரில் அப் போது தமிழ்ப்புலவர்களும், தமிழ்ப் பயிற்சியும் இல்லாதிருப்பதை அறிந்து மிகவும் மனம் கவன் றார். அதனால் மதுரையில் தமிழ் தழைத்தோங்கு தற்குரிய முயற்சியை உடனே மேற்கொண்டு, அதற்குரிய உபாயத்தை நாடி நின்றார்.