பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 103

- திருக்கோயிலை அடுத்துள்ள வீதிகளில் வான வெல்லையிற் பறக்கும் கொடிகளால் ஞாயிற்றின் வெயிற் கதிர் நுழைவது அரிது; அந்த அழகுமிக்க திருவீதியை நாவுக்கரசர் முறைப்படி வணங்கி, மறையொலியும் முனிவரின் ஏத்தொலியும் பெருகி நிற்கும் எழுநிலைக் கோபுரம் கண்டு வணங்கி உள்ளே புகுந்தனர்.

கோபுரவாயிலைக் கடந்ததும் உள்ளே கிடப்பது திருமாளிகை விதி அதனை வலம் வரும் நாவுக்கரசர் உள்ளத்தே அம்பலக் கூத்தன்பால் உண்டாகிய ஆர்வம் அளவிற் பெருக அலமரல் எய்துகிறது. அன்பு கடல் போற் சிறந்து தோன்ற உடலெங்கும் புலம் உண்டாகிறது. அந்நிலையில் பொற்கோபுர வாயிலை அடையும் நாவரசர், சிவபெருமான் நடம்புரியும் பொன்மன்ற எதிர் தோன்றக் காண்கின்றார்.

திருமிக்க அம்மன்றின்கண் ஒலிபெருகி நிறைந்து நினைவு செல்லுகிறது. அதனைச் சென்று கூடற்கு அன்புமிக்கு எழவும், கூடற் கண் தோன்றும் இன்ப நுகர்ச்சிக்கு ஒத்த சத்துவகுணம் மேம்படுகிறது: அவரும் திருநடம் கண்டு ஆராப்பேருவகையுற்றுத் தொழுவாராயினர். இதனைச் சேக்கிழார் பெருமான், “நீடும் திருவுடன் நிகழும் பெருகு ஒளிநிறை அம்பலம் நினைவுற நேரே கூடும்படி வரும் அன்பால் இன்புறு குணம் முன் பெறவரும் நிலை கூட.ஆடுங்கழல் புரி அமுதத்திருநடம் ஆராவகை தொழுது ஆர்கின்றார்” என்று கூறுகின்றார். இதன்கண் திருஎன்பது