பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106. இ. ஒளவை சு. துரைசாமி

கயிறற்ற பாவைபோல அவரது மெய்தானாகவே விழுவதும் எழுவதுமாயிற்று என்பார், “மெய்யும் தரைமிசை விழுமுன்பு எழுதரும்” என்கின்றார்.

இனி, அம்பலத்தின்கண் ஆடும் பெருமான் திருநடத்தை, “மின்தாழ் சடையொடு நின்றாடும் - ஐயன் திருநடம்” என்று இசைக்கின்றார். இருந்தும் கிடந்தும் ஆடல்வகையுண்டு எனினும், அவை பலரும் கண்டு இன்புறற்கு ஆகாமையின், கூத்த பிரான் நின்றாடுகின்றான் என்றும் ஆடுங்கால் அவன் திருமுடியிலுள்ள செஞ்சடை உலகெங்கும் உயிர் தோறும் ஒளிசெய்யுமாற்றால், ஒலியாலும் நிறத் தாலும் ஒருபுடையொக்கும் விண்ணிற்றோன்றும் மின்னலைத் தாழச் செய்தலின், “மின்தாழ் சடை” என்றும் குறிக்கின்றார்.

தாழநின்று ஆடும் ஐயன் திருநடம் பன்முறை வணங்கியெழும் நாவுக்கரசர்க்கு உள்ளத்தே ஆர்வம் பெருகுகிறது; பெருமானுடைய திருமுகக் குறிப்பு என்று வந்தாய் என்பது போலவும் உளது: இதனால் அவர்மனத்தெழும் ஆர்வம் அளவிறந்து விடுகிறது. அதனால் “அவர் ஆர்வம் பெருகுதல் அளவின்றால்” என்று தெரிவிக்கிற்ார் ஆசிரியர் சேக்கிழார். இறைவனது திருமுகத் தருட்குறிப்பு அவரது அருள் நலத்தைக் காட்ட, அதனால் கழிபேரின்பம் எய்தும் வாகீசப் பெருந்தகை,

“பாளையுடைக் கழுகோங்கிப் -

பன்மாடம் நெருங்கியெங்கும்