பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 107

வாளையுடைப் புனல்வந்தெறி

வாழ்வயல் தில்லைதன்னுள்

ஆளவுடைக்கழல் சிற்றம் பலத்தான்

ஆடல்கண்டால்

பீளையுடைக் கண்களால் பிள்ளைப்

பேய்த் தொண்டர் காண்பதென்னே”

என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும்,

“கருநட்டகண்டனை அண்டத்

தலைவனைக் கற்பகத்தைச் செருநட்டமும்மதில் எய்ய - வல்லானைச் செந்தீமுழங்கத் திருநட்டமாடியைத் தில்லைக்

கிறையைச் சிற்றம்பலத்துப் பெருநட்டமா டியை வானவர்கோன்

என்று வாழ்த்துவனே.” -

என்று தொடங்கும் விருத்தத் திருமொழியையும் பாடுகின்றார்.

இவ்வாறு மனமகிழ்வால் மைந்துற்றுப் பாடிய திருநாவுக்கரசர், தில்லைச் சிற்றம்பலத்துக்குத் தாம் வந்த காரணத்தை - *

“பத்தனாய்ப் பாடமாட்டேன் - பரமனே பரமயோகி எத்தினாற்பத்தி செய்கேன்

என்னை நீ இகழவேண்டா