பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 17

பாலையில் அவனது அருட்கடலில் திளைக்கினும், அவருள்ளம் தில்லையம்பலத்தை நோக்கிச் சென்று அவனைப்பாடவே விரும்பி அவரை உந்திற்று. இதனைச் சேக்கிழார் “மனைப்படப்பில் கடற் கொழுந்து வளைசொரியும் கழிப்பாலை” என்று குறிக்கின்றார்.

கழிப்பாலை ஞாழல்மரங்கள் நிறைந்த சோலை சூழ்ந்தது; அதனுாடு அவர் நுழைந்து வருகையில், எப்பொழுது சென்ற தில்லை காண்பது என்ற வேட்கை மிகுந்து அவரை மருகவே, நினைப்பவர் மனம் கோயில் கொள்ளும் அம்பல வாணனை நினைந்து பனைக்கை மும்மத வேழம் உரித்தனன் என்று தொடங்கும் குறுந்தொகையைப் பாடலா னார். அதனைச் சேக்கிழார், “கழிப்பாலை மருங்கு

நீங்கி,

நனைச்சினைமென்குளிர் ஞாழல்

பொழிலுடு வழிக்கொண்டு நன்னும் போதில்

நினைப்பவர் தம் மனம் கோயில்

கொண்டருளும் அம்பலத்து நிருத்தனாரைத் -

தினைத்தனையாம் பொழுதும் மறந்து

உய்வனோ எனப்பாடித் தில்லை சார்ந்தார்.”

என்று உரைக்கின்றார்.