பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 இ. ஒளவை சு. துரைசாமி

1. பனைக்கை.உய்வனோ

இப்பாட்டில், வேழம் உரித்தவனும், நினைப் பவர் மனத்தில் கோயில் கொள்பவனும், அனைத்துப் பொருளையும் தனக்கு மேனியாகக் கொள்பவனும் ஆகிய அம்பலக் கூத்தனைத் தினையளவு காலமும் மறந்து உயிர் வாழேன் என்கிறார். நினைப்பவர் நெஞ்சில் நினைந்த அப்பொழுதே நேர்படத் தோன்றி நிற்கும் நீர்மையன் என்றற்கு நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன் என்றும், விரைவு பற்றிக் கொள்பவன் என்னாது கொண்டவன் என்றும் கூறுகின்றார். உருவும் அருவுமாகிய எப்பொருளிலும் அப்பெருமான் வீற்றிருப்பது பற்றி அனைத்தும் வேடமாம் என்றும், அப்பெற்றியோன் தமக்குள்ளே இருப்பவும் அவனை நினையாதிருத்தல் உய்தியில் குற்றமாதலால் தினைப் பொழுதும் மறந்து உய்வானோ என்றும் கூறுகின்றார்.

2. தீர்த்தனை.உய்வனோ

இதன் கண், கூத்தப்பெருமானைச் சிவன், சிவலோகன், தீர்த்தன், மூர்த்தி, முதலாய ஒருவன் என்றும், பார்த்தனுக்கருளிய பரமன் என்றும் கூறி அவனைக் கொடியனாய் மறந்து உய்யேன் என்கிறார்.

தீர்த்தன், உயர்ந்தவன்; கங்கையாய தீர்த்தம் உடையவன் என்றுமாம். மூர்த்தங்களுக்கெல்லாம் முதல்வனாய் ஒருவனாய் நிற்றல் பற்றி முதலாய ஒருவன் என்றும், அடிசேர்வார் உறையும் உலகத்தை