பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 : ஒளவை சு. துரைசாமி

செய்தலும் இன்ப துன்ப நுகர்ச்சியும் உடையவாய்ப் பிறத்தலும் இறத்தலும் செய்வன. இவற்றின் செயல் முறையும் வாழ்க்கையும் மக்களுயிரின் மேனிலையில் உள்ளன். “தெய்வம் சுட்டிய பெயர் நிலைக்கிளவி” மக்கள் இனத்தன அல்ல வாகலின் “இவ்வென அறியும் அந்தம் தமக்கு இல” என்றும், சொல்லுலகில் “உயர்திணை மருங்கின் பால்பிரிந்து இசைக்கும்” என்றும் ஆசிரியர் தொல்காப்பியர் வகுத்துரைக் கின்றார். -

பழந்தமிழர் சொல்லுலகை உயர்திணை அஃறிணை எனக் கொண்டாற்போலப் பொரு ளுலகைக் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐந்தாக வகுத்துக் கொண்டனர். இப்பகுதியுள் வாழ்ந்த மக்கள் முறையே குன்றவர், ஆயர், வேளாளர், பரதவர், எயினர் எனக் குறிக்கப் பெற்றனர். அவர்களைத் திணை நிலை மக்கள் என்பது வழக்கம். அவரவர் வாழ்க்கைக்குரிய உணவு தொழில் முதலியன தனித்தனியே உள்ளன. அவற்றோடு சமய வொழுக்கத்தைக் கூட்ட மேலே குறித்த தெய்வங்களையும் ஒவ்வொரு பகுதிக்கும் உரிமை செய்துள்ளனர். குறிஞ்சிக்கு முருகனும், முல்லைக்கு மாயவனும், மருதத்துக்கு இந்திரனும், நெய்தலுக்கு வருணனும், பாலைக்குக் கொற்றவையும் தெய்வமாவர். இவர்கட்கு நாட்பூசனையும் விழாவும் வழிபாடும் செய்வது சமய வொழுக்கமாகிறது. கடவுள் என்பது இத்தெய்வ வகைகட்கு மேற்பட்டு