பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 151

&o சிவபெருமானைக் கண்ணாரக் காண்கின்றார்.

இதனை, -

“வெள்ளிவெற்பின்மேல் மரகதக் கொடியுடன் விளங்கும் தெள்ளுபேரொளிப் பவளவெற்பென இடப்பாகம் கொள்ளும் மாமலையாளுடன் கூடவீற்றிருந்த வள்ளலாரை முன் கண்டனர் வாக்கின் மன்னவனார்”

என வரலாறு கூறுகிறது.

கண்ட நாவரசர் அன்புருவாகிச் செந்தமிழ்த் தேன் பிலிற்றும் திருப்பதங்களும் தாண்டகங்களும் பாடலானார். காணப்படுவன பலவும் சிவமும் சத்தியுமாய்க காட்சி தருவதை வியந்தவர்,

“மாதர் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும்பாடிப் போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்”

என்று கயிலையாய்க் காட்சிதரும் திருக்கோயிலுள் புகுகின்றதைப் பாடுகின்றார். அவர் புகும் போது அவர்க்கு முன்னே பலரும் பூவும் நீரும் சுமந்து

சிவனை உமா தேவியொடும் பிணைத்துப் பேரன் புடன் பாடிக் கொண்டே செல்கிறார்கள். பிறைக் கண்ணி சூடிய பெருமானை உமாதேவியுடன் சேர்த்துப் பலரும் பாடிச் செல்கின்றார்கள். அவர் பின்பு யான் கோயிற்குள் புகுகின்றேன் என்பது நாவரசரின் உள்ளத்து நிறைந்து வழியும் சிவப் பேரின்பத்தையே இனிது தெரிவிக்கின்றது ஒருபால்