பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 171

தனித்தெப்பம் பார்வாழத் தந்தபிரான்” என்று உரைத்துப்பின்னர்,

பதிகப்பெருவழி காட்டப் பருப்பதக் கோன்பயந்த மதியத் திருநுதல் பங்கன் அருள்பெற வைத்த எங்கள் நிதியைப் பிரமாபுரநகர் மன்னனை என்னுடைய கதியைக் கருதவல்லோர் அமராவதி காப்பவரே”

என்றும்,

“தேறும் புனல்தில்லைச் சிற்றம்பலத்துச் சிறந்துவந்துள் ஊறும் அமிர்தப் பருகிட்டெழுவதோர் உட்களிப்புக் கூறும் வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன்

- கொழுந்தேன் நாறும் அலங்கல் தமிழாகரன் என்னும் நன்னிதியே.” என்றும் திருச்சண்பை விருத்தத்தில்,

“ஆறதேறுஞ் சடையானருள் மேவ அவனியர்க்கு விறதேறும் தமிழால் வழி கண்டவன்” என்றும் கூறியுள்ளார்.

இனி, ஞானசம்பந்தர் அருளிய திருப்பதிகத்தை ஒதும்போது திருநனிபள்ளித் திருப்பதிகத் திருக் கடைக்காப்பில் “இடுபறை என்ற அத்தன் பியல் மேலிருந்து இன் இசையால் உரைத்த பனுவல், நடுவிருள் ஆடுமெந்தை நனிபள்ளியுள்க வினை கெடுதல் ஆணைநமதே என்றும், கோளறுபதிகத் திருக்கடைக்காப்பில், “தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய், ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்