பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ: 179

என்று கூறுகின்றார். பிறிதோரிடத்தில் இக் கருத்தைச் சிறிது மாற்றி,

“எனவே இடரகலும் இன்பமே எய்தும் நனவே அரனருளை நாடும் - புனல்மேய செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன் கொங்கமலத் தண்காழிக் கோ”

என்று நமக்கு அறிவுறுத்துகின்றார். ஆகவே ஞான சம்பந்தர் என்ற திருப்பெயர் ஒதினார்க்கு உயர்நலம் பெறுவிக்கும் உறுதியுடைய தென்பது வற்புறுத்தினா ராயிற்று.

இனி, ஞானசம்பந்தப் பெருந்தகையின் திருவடியை அனைவரும் பரவிப் பணியவேண்டும் என்பார் அவற்றின் பெருமையைப் பல விடங்களில் பாராட்டிக் கூறுகின்றார். நினைவார் நினைவில் எழுந்தருளி இன்பத்தேன் பெருகுவது அவர் திருவடியின் மாண்பு என்பார்,

“என்றும் அடியவர் உள்ளத் திருப்பன, இவ்வுலகோர் நன்று மலர்கொடு தூவித் துதிப்பன, நல்லசங்கத்து ஒன்றும் புலவர்கள் யாப்புக் குரியன, ஒண்கலியைப் பொன்றுங் கவுணியன் சைவ சிகாமணி பொன்னடியே” என்று திருமும்மணிக் கோவையிலும்,

“கவிக்குத் தகுவன, கண்ணுக் கினியன, கேட்கில்இன்பம் செவிக்குத் தகுவன, சிந்தைக் குரியன, பைந்தரள

நவிக்கண் சிறுமியர் முற்றில் முகந்துதம் சிற்றில்தொறும் குவிக்கத் திரைபரக்கும் கொச்சை நாதன் குரைகழலே”