பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 181

மக்கள் வழங்கிய நல்லுரையால் தெளிந்தோமா

யினும், நம்பியாண்டார் கூறுவது காண்போம்.

அவரும் திருவடிப்பேறு சிவபோகப் பேறே என்பார். “பெறுவது நிச்சயம், அஞ்சல்நெஞ்சே, பிரமாபுரத்து மறுவறு பொற்கழல் ஞானசம் பந்தனை வாழ்த்துவதால் வெறியுறு கொன்றை மறியுறு செங்கை விடையெடுத்த பொறியுறு பொற்கொடி எம்பெருமான் அமர் பொன்னுலகே

என்று அழுத்தமும் திருத்தமும் பொருந்தக் கூறு கின்றார். சிவபோகம் பெறுதல் எளிதன்றே; திருஞான சம்பந்தர் திருவடி வழிபாடு அதனைத் தருமென மிக எளிதாகக் கூறுகின்றீரேயெனின், “எளிது எளிதே’ எனவற்புறுத்துவாராய், பிறிதோரிடத்தில்,

“முத்தன வெண்ணகையார் மயல்மாற்றி முறைவழுவாது எத்தனைகாலம் நின்றேத்தும் அவரினும் என்பணிந்த பித்தனை எங்கள்பிரானை அணைவது எளிதுகண்டீர், அத்தனை ஞானசம்பந்தனைப் பாதம் அடைந்தவர்க்கே”

என்று உரைக்கின்றார். இதனைக் கேட்டதும், நம்மனோர் மனத்தில், “அஃது எவ்வாறு இயலும்; ஞானசம்பந்தர்க்கு அடியோம் என்பதனால் சிவபோகம் பேறு எய்தும் என்பது எங்ஙனம் அமையும்?” என்றெல்லாம் எண்ணம் எழுகிறது. அதற்கு நம்பியாண்டார் நம்பி நல்ல காரணம் கூறுவார்.

“சுரபுரத்தார்தம் துயருக் கிரங்கிச் சுரர்கள்தங்கள்

பரபுரத்தார் தம்துயர்கண்டருளும் பரமன்மன்னும்