பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 இ. ஒளவை சு. துரைசாமி

செய்கையே உரிய செய்கையாகும் என்பதைப் பல திருப்பாட்டுக்களில் வெளிப்படையாகவும், உள்ளு றுத்தும் ஞானசம்பந்தப் பிள்ளையார் தெருட்டி யருளுகின்றார். வெளிப்படையாகத் தெருட்டுதலைக் காட்டும் பாசுரங்கள் மிகவாய்ப் பல்கி யாவரும் காணக்கிடத்தலின், அவற்றை விலக்கி உள்ஸ்ரீத் துரைக்கும் பாசுரங்கள் சிலவாய்ச் சிலரே காணத் தக்கவாய் இருத்தலின், அவற்றுள் ஒன்றைக் கூறு கின்றோம். -

நம் ஆளுடைய பிள்ளையார் சீகாழிக்கருகி லுள்ள திருக்கோலக்கா என்னும் திருப்பதிக்குச் சென்று, தம் மெல்லிய கைகளால் தாளம் போட்டு “மடையில் வாளைபாய” என்ற திருப்பதிகத்தைப் பாடியருளிய செய்தி தமிழ்நாடு நன்கறிந்ததாகும். ஆயினும், இப்பதிகத்துள் உயிரறிவு ஆண்டவனைப் டாடிப் பரவுதலாம் கலங்கி அருண்மணங்கமழ்ந்து, வினைப் பிணிப்புத் தளர்ந்து, அறியாமை நீங்கிப் பேரின்ப நுகர்ச்சிக் குரிமையெய்தும் திறத்தை உள்ஸ்ரீத்துரைக்கின்றார்.

“மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையும் சாம்பற் பூச்சும்கீள் உடையும் கொண்ட உருவம் என்கொலோ” என்பது முதற்பாசுரம். இதில், அடியார்கள்

பரமானது அருள் நினைந்து பாடிப்பரவித் திளைத்த லால், அவர் தம் உயிரறிவு கலங்கி அருண் மணம்