பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 இ ஒளவை சு. துரைசாமி

தித்தித் துறுந் தெய்வத் தேறல் துண்டத் துளையிற் பண்டைவழி யன்றி அறிவி னாறும் நறிய நாற்றம் ஏனைய தன்மையும் எய்தாது எவற்றையுந் தானே யாகி நின்ற தத்துவன்” இடை மருது. 22)

என்று உயிர்களின் அறிகருவிகட் கெட்டாமல் அகத்தே அவ்வப் புலப்பொருளாய்க் காட்சியளிக்கும் என விளங்கியுரைப்பர்.

இவ்வாறு உலக முழுதும் எல்லாம் தானேயாய் நிற்கும் கடவுளாகிய சிவபரம் பொருட்குச் சமயங்கள் பலவும் உரியன என்று கூறுவது சைவத்தின் தனிச் சிறப்பாகும். “அன்றென்றும் ஆ மென்றும் ஆறு சமயங்கள், ஒன்றோடொன் றொல்வா துரைத்தாலும் என்றும், ஒரு தனையே நோக்குவார் உள்ளத் திருக்கும்” (இடைமருது. 17) எனவும், திருவமர் மாலொடு திசைமுகனென்றும், உளனேயென்றும் இலனேயென்றும், தளரானென்றும் தளர்வோனென் றும், ஆதியென்றும் அசோகின னென்றும், போதியிற் பொலிந்த புராண னென்றும், இன்னவை முதலாத் தாமறி யுளவையின், மன்னிய நூலின் பன்மையுள் மயங்கிப், பிணங்கு மாந்தர் பெற்றிமை நோக்கி, அணங்கிய அவ்வவர்க் கவ்வவையாகி யடையப் பற்றிய பளிங்கு போலும், ஒற்றி மாநகருடைய கோவே (ஒற்றி, 2) எனவும் கூறிச் சமய வேற்று மையைக் களைவதில் பிள்ளையார் சிறந்து நிற்பர். உடம்பை மரக்கலமாகவும், வினைகளைச் சரக்