பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 இ ஒளவை சு. துரைசாமி

அருள் ஞானம் வழங்குவனென்றும் ஞானத்தால் பீடு கைகூடு மென்றும் சித்தாந்தமாகிய சைவாகமங்கள் . கூறும். அதனை நம் பட்டினத்தார், மேற்படும் இதயப் பாற் கடல் நடுவுள், பரம்பரை தவறா வரம் பெறு குரவன், மருளற விரங்கி யருளிய குறி யெனும், நிந்தையில் கனக மந்தரம் நிறுவி, மாணறி வென்னும் துரணிடைப் பிணித்த, நேசமென்னும் வாசுகி கொளுவி, மதித்த லென்னும் மதித்தலை யுஞற்றிய, பேரா வின்பச் சீரானந்தப், பெறலரு மமுதம் திறனொடும் பெற்று, ஞானவாய் கொண்டு மோனமா யுண்டு, பிறப்பிறப்பென்னு மறப் பெரும் பயத்தால், பன்னாட்பட்ட வின்னாங்ககற்றி, என்னையுந் தன்னையும் மறந்திட், டின்ப மேலி டெய்துதற் பொருட்டே’ (கழுமல. 13) என்று கூறுகின்றார். இவ்வாறு திருவருள் ஞானத்தைக் குரவன் அருளப் பெற்ற வழி, மனத்திடைப் படிந்து கிடக்கும் இருள் நீங்கும்; உள்ளம் தெளிவுறும்; அத் - தெளிவின்கண் இன்பம் பெருகும்; அது வழியே இதுகாறும் கண்டறியாத மகிழ்ச்சி மேலிடும்; இறைவன் பால் அயராத அன்பு தோன்றும் (கழுமல. 5) என்று விளக்குகின்றார். மருள் எனவும் இருள் எனவும் இங்கே குறிக்கப் பெறுவன ஆணவம் கன்மம் மாயை என்று கூறப்படும்; அவற்றை, பேரிக லானவக் காரிருள்’ எனவும், மின்றொடர் வல்வினை வன்றொடர் எனவும், மாயைமா மாயை ய்ாய பேய் (கழுமல. 13) எனவும் வகுத்துரைப்பர்.