பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 & ஒளவை சு. துரைசாமி

“பேரிசை நவிரம் மோய் உறையும்

காரியுண்டிக் கடவுள்”

என்றும் கூறுவர். அவன் முப்புரம் எரித்த வரலாற்றை, -

“ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளிஇ

ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற் றண்ணல்”

என்றும்,

“தொடங்கற்கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல்சாய அமரர்வந் திரத்தலின் மடங்கல்போற் சினை.இ மாயம்செய் அவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணால் மூவெயிலும் உடன்றான்”

என்றும்,

“உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண், மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வன்” என்றும் பழந்தமிழர் தம்முட் பாராட்டிப் பரவி வந்துள்ளனர்.

பழந்தமிழர் சமய வாழ்வில் கார்த்திகை விளக்கீடும், மார்கழித்தைந் நீராட்டும், பங்குனி உள்ளி விழாவும், சித்திரை இந்திர விழாவும், வேனில் - விழாவும் பிறவும் சிறந்து விளங்கின. கார்த்திகை விளக்கீட்டு விழா இன்றைய தீபாவளிப் பொங்கற்