பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ. 259

இனி, நிறுத்தமுறையானே பிள்ளையார் மொழிந்தருளிய “வையகமுந்துயர் தீர்கவே” என்ற பாசுரப் பகுதிக்கு ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் பேருரை வகுக்கின்றார்.

உரை:- சொன்ன -மேலே திருவாய் மலர்ந் தருளிய “வாழ்க அந்தணர்” என்றற் றொடக்கத்துத் திருப்பாசுரத்து; வையகமும் துயர் தீர்கவே என்னும் நீர்மை - வையகமும் துயர் தீர்கவே என்ற மெய்ம் மொழியின் கருத்து; இகபரத்தில் - இம்மை மறுமை களில், துயர்மன்னிவாழ் உலகத்தவர் - துன்பம் மிகுந்து வாழும் இவ்வுலகத்து மக்கள்; மாற்றிட - அத்துன்பங்களைப் போக்கி இன்பமெய்துவித்துக் கொள்ளற் பொருட்டு; முன்னர் - முதற் பாசுரத்தி லேயே; ஞானசம்பந்தர் மொழிந்தனர் - எல்லாம் அரன் நாமமே சூழ்க அதனால் வையகமெல்லாம் துயர்நீங்கி வாழ்க என்று ஞானசம்பந்தப் பிள்ளையார் மொழிந்தருளினார் (எ - று)

உரைபெருகி நீட்டித்தலின், கடைப்பிடியும் இயைபும் தோன்ற, “சொன்னவையகமும் துயர் தீர்கவே,” என்றார். “அரன்நாமமே சூழ்க’ என்ற திருவுள்ளத்தால், வையகமும் வாழ்த்தப்பெறும் அருமைப்பாடு நினைந்து ‘சொன்ன,” எனச் சிறப்பித்தாரென்றலுமொன்று. அயல்நெறி நின்றார் வீழ்க என்னாது, அந்நெறியே வீழ்க என்ற அருட்குறிப்பு, அரன் நாமமே சூழ்ந்து வாழும் மக்களேயன்றி ஏனையோர் வாழும் நிலவுலகுக்கும்