பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் ஆ 285

மொழிந்து அவன் கூறும் மொழி கேட்டு வருதல் வேண்டும்”, என்பாள். -

“ஒது அவன்நாமம், உரைஅவன் பல்குணம்,

உன்னைவிட்டேன், போது அவன்பின்னே, பொருந்து அவன்வாழ்க்கை திருந்தச் சென்று, மாதவ மாகிடு, மாதவன் மாவளர் புன்சடையான் யாதவன் சொன்னான் அதுகொண் டொழியினி

ஆரணங்கே” (54) என்று மொழிந்து விடுகின்றாள்.

இஃது இங்ஙனமாக, மகளிர் இருவர் ஒரு சொல்லாடல் நிகழ்த்துகின்றார்கள். ஒருத்தி, “இறைவன் முதற்கண் செற்றது காமனையே’ என் கின்றாள்; மற்றவள் ‘காலனையே முதற்கண் செற்றார்” என்று கலாய்க்கின்றாள். அவர்க்கு நடுவாக நின்ற ஒருத்தி நேரே பரமனையடைந்து உண்மை துணிய முயன்று, அவன் ஒன்றும் உரையாமை கண்டு உரைப்பாள்,

“காமனை முன்செற்ற தென்னாள் அவள், இவள்

காலன்என்னும் தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன்

- - கையெறிந்தாள்; நாம்முனம் செற்றதன்று யாரைஎன் றேற்குஇரு , - - - - . . . . வர்க்குமஞ்சி ஆமெனக் கிற்றிலர் அன்றெனக் கிற்றிலர் அந்தணரே”

. . . - (45)