பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 ஒளவை சு. துரைசாமி

பரத்தையேத்தினும் உள்ளத்தூடல் உண்டு” என்பது தொல்காப்பியம். இவ்வாறு தலைவி தலைவனைப் புலந்து பரத்தையரை உயர்த்திக் கூறியது பரத்தைக்கு எட்டுகிறது. அவள் தலைவியைப் புறனுரைக் கின்றாள். அச்செய்தி தலைவிக்குத் தெரிகிறது. தலைவி வெகுண்டு, “பரத்தையர் ஒருவரல்லர், பலர் உளராயினும் தலைவன் எனக்கே உரியனாவான்; எப்படியெனின், ஒரு குளத்தில் பல்லாயிரம் ஆம்பல்கள் நெருங்க மலர்ந்திருப்பினும், தாமரை ஒன்று உளதாகிய வழி, அக்குளம் தாமரைக்குளம் என்றே உரைக்கப்படும்”, என்ற கருத்துத் தோன்றத் தன் தோழியை நோக்கி, பரத்தைக்குப் பாங்காயினார் கேட்ப,

“திறமலி இன்மொழிச் செந்துவர் வாயினை!

எங்கையர்க்கே மறமலி வேலோன் அருளுக; வார்சடை யான்கடவூர்த் துறைமலி ஆம்பல் பல்லா யிரத்துத் தமியேஎழினும்

நறைமலி தாமரை தன்னதன் றோசெல்லும் நற்கயமே’,

என்று நவிலுகின்றாள். -

இத்திரு மும்மணிக்கோவைக்கண் வரும் திருப் பாட்டுக்கள் பலவும் சங்கத் தொகை நூற்களில் காணப்படும் கருத்துக்கள் பலவற்றை உட்கொண்டு நிற்கின்றன. -

“மனையுறை குருவி வளைவாய்ச் சேவல் சினைமுதிர் பேடைச் செவ்வி நோக்கி