பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் தி 299

என்று மொழிந்து கொண்டு சென்று பெருவேட்கை தலைக்கொள்கின்றாள்; மேனி மெலிகின்றாள்; வளை நெகிழ்ந்தோடுகிறது; உடையும் சோர்கிறது. அதனால்,

அங்கை வளைதொழுது காத்தாள், கலைகாவாள் நங்கை இவளும் நலம் தோற்றாள்.

வேறொருத்தி, அரிவைப் பருவம் உடையவள். அவள் தன் ஆய மகளிருடன் கவறாடிக் கொண்டிருக் கின்றாள். அப்போது சிவபெருமான் உலா வரு கின்றான். அவன் சடைமுடி அவட்குத் தெரிகிறது. அவன்பால் அவட்குக் காதல் வேட்கை பெருகு கின்றது. அவள்,

தேவாதி தேவன் சிவனாயின் தேன்கொன்றைப் பூவார் அலங்கல் அருளாது போவானேல் கண்டால் அறிவன் எனச் சொல்லிக் கை சோர்ந்து வண்டார் பூங்கோதை வளம் தோற்றாள்”

இறுதியாகப் பேரிளம் பெண்ணொருத்தி உலாவரும் பரமனைக் காண்கின்றாள். அவளைப் பற்றிக் கூறும் சேரமான் பெருமாள்,

“பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள், பண்ணமரும் இன்சொல் பணிமொழியாள்-மண்ணின்

மேல் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள என்று-பண்டையோர் கட்டுரையை மேம்படுத்தான்"