பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 , ஒளவை சு. துரைசாமி

குறிப்புப் பராக்கிரமனுக்குத் தெரிந்தது. தன்னையும் தனது ஆட்சியையும் காத்துக்கொள்ளும் முயற்சியில் அவன் ஈடுபட்டு ஈழவேந்தன் பராக்கிரம பாகுவைப் படைத்துணை புரியுமாறு வேண்டினான்.

ஈழ வேந்தன்பால் இலங்காபுரித் தண்டநாயகன் என்றொரு தானைத்தலைவன் இருந்தான். பெரு வலியும் ஆழ்ந்த சூழ்ச்சியும் அத் தண்டநாயகன்பால் இருந்தன. மறப்புகழ் வேட்கையே அவனது வடிவம். பராக்கிரமன் விடுத்த வேண்டுகோளைக் கண்டதும் தண்ட நாயகற்கு உள்ளம் பூரித்தது. ஈழ நாட்டின் மறப்புகழைத் தமிழகத்தில் நிலைபெறச் செய்தற்கு நல்லதோர் வாய்ப்பு உண்டானதாக எண்ணினான். பண்டைச் சோழ வேந்தரும் பாண்டி மன்னரும் ஈழநாட்டில் தங்கள் புகழொளியைப் பரப்பியிருப்பது அவனுள்ளத்தே பொறாமையுணர்வைத் தோற்றுவித் திருந்தது. இதனால் அவன் பராக்கிரமனுக்கு ஈழப்படை சென்று துணைபுரிவது தக்கதே என்று ஈழவந்தனான பராக்கிரமபாகுவுக்கு எடுத்துரைத்தான். தொடக்கத்தில் பராக்கிரமபாகுவுக்குப் பராக்கிரம பாண்டியன் விடுத்த வேண்டுகோளை ஏற்றற்கு உள்ளம் செல்லவில்லை. மேற்கே கேரள வேணாட்டு வேந்தர்களும் வடக்கே சோழவேந்தரும் பொரு ளாலும் படையாலும் சிறப்புற்று விளங்க அவர்கள் துணையை நாடாது தன்னை நாடியது ஈழ வேந்தனுக்கு உண்மையிலேயே ஐயத்தை எழுப்பிற்று. இவ்வகையில் பராக்கிரமபாகு தன் துணைவரையும்