பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 341

முற்றுவாராயினர். அதனால் பேரச்சம் கொண்ட வீரபாண்டியன் மதுரையைவிட்டு ஓடிவிட்டான். தண்டநாயகனும் கடற்கரைப் பகுதிக்கோடி ஈழ வேந்தனைப்படையொன்றைத் துணையாகச் செலுத்துமாறு வேண்டிக் கொண்டான். வேண்டிய வாறே ஈழநாட்டினின்றும் வந்த பெரும் புதுப் படையுடன் கூடி இலங்காபுரித் தண்டநாயகன் குலசேகரனை மறுபடியும் பொருது வென்று வெருட்டிவிட்டு வீரபாண்டியனுக்கு மதுரையில் முடிசூட்டி வெற்றிவிழா நடத்தினான். பின்பொரு கால் குலசேகரன் சீவில்லிப்புத்துாரருகே ஈழப்படை யொடு பொருது தோற்றுத் திருநெல்வேலிப் பகுதிக்குச் சென்று சேர்ந்தான்.

பன்முறை முயன்று வெற்றி பெறாமை ஒருபுறம் வருத்த, மற்றொருபுறம் தன் செயல்களால் ஏதில் ஈழப்படைக்குத் தமிழ்நாட்டில் ஏற்றமும் இடமும் உண்டானது குலசேகரனுக்குப் பெருவருத்தத்தைச் செய்தது. அந்நாளில் சேர நாட்டரசரினும் சோழ வேந்தரே உலகுபுகழும் போர்ப்புகழ் எய்தியிருந்தனர். அவர்களால்தான் தமிழகத்தில் தனிப்புகழும் கெடாது நிலைபெற்றுவந்தது. குலசேகரன் அதனை எண்ணினான். இராசகேசரிவன்மனான இரண்டாம் இராசாதிராசன்பால் சென்று நிகழ்ந்தது முற்றும் அவனுக்கு நன்கு எடுத்து இசைத்தான்.

இரண்டாம் இராசாதிராசன் வேண்டும் அளவு தனிப் பெரும்படையொன்றைக் குலசேகரனுக்குத்