பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/351

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 இ. ஒளவை சு.துரைசாமி

நிற்கலாற்றாது உடைந்தோடலுற்றது. ஈழப்படைக்குத் துணைசெய்த பாண்டித்தலைவர் சிலர் இருந்த்விடம் தெரியாதவாறு ஒடி ஒளிந்தனர். ஈழப்படை இதுகாறும் பெற்றுப் போந்த வெற்றியெல்லாம் பகற்கண்வாய் மறைந்தழிந்தன. - -

இவ்வாறு நாடோறும் தமிழ்ப்படையை வெற்றிசிறந்து மிகுவது கண்ட குறுநிலத் தலைவர். பலரும் சோழர்படையில் பக்கம் நின்று துணை செய்வாராயினர். ஈழப்படைத் தலைவர்களான இலங்காபுரித்தண்ட நாயகனும் சயதர தண்ட நாயகனும் அவர்கட்குத் துணையாக வந்த தானைத் தலைவர்களும் இனி, இங்கே போர்புரிந்து வெற்றி பெறுவதென்பது இயலாது எனத் தெரிந்து தம் ஈழநாட்டிற்கு ஓடிவிட்டனர். பாண்டியன் குல சேகரனுடைய ஆட்சி நிலைபேறு கொண்டது.

இவ்வெற்றி நலத்தால் சோழவேந்தனான இராசாதிராசனது புகழ் பெருகிற்று. பாண்டி நாட்டு மக்கள் சோழவேந்தன் படைமறவரைப் பாராட்டி வாழ்ந்தனர் படைத் தலைவனான பல்லவராயன், சோழர்படைக்கு எய்திய வெற்றி நலத்தையும் வேந்தன் புகழ்ப்பெருக்கத்தையும் தன் தந்தைக்குத் திருமுகமெழுதித் தெரிவித்தான். எதிரிலி சோழன் இன்பக்கடலில் மூழ்கினான். தமிழ்ப்படை பெற்ற வெற்றிக்கு ஞானசிவ தேவரது “அகோர சுபூஜை” காரணம் என எதிரிலி சோழச் சம்புவராயன் எண்ணினான்; நேரே ஞானசிவர்பால் சென்றான்.