பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 47

இல்லை. அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும் சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே என்று தொல் காப்பியம் கூறுகிறது. இறந்தது, வயது முதிர்ந்தது. சிறந்தது, சமயம் கூறும் உணர்வொழுக்கம், சிறந்தது பயிற்றல் கூறுவதால், பயிற்றுதற்குரிய நூல்களும் நெறிகளும் இருந்திருக்கும் என்பது நன்கு விளங்கும். சங்கவிலக்கியங்களும் தவமும் துறவும் கடவுள் வழிபாடும் பிறவும் ஆகியவற்றைக் குறிக்கின்றன. இத்தவ முதலியனவே பொருளாக எழுந்த நூல்களாத லால், இவற்றை ஆங்காங்குக் குறித்துக் காட்டுவதே இயல்பாக அமைந்திருக்கிறது. மேலும் காண்போ மாயின், வேள்வி வேட்டலும் சங்க விலக்கியங்களில் அருகிக் காணப்படுகிறது. தொல்காப்பியம் வேள்வி வேட்டலைத் தமிழர் வாழ்க்கையில் காணாமை யால், அதனை அவர் தம் இல்வாழ்க்கைக் குறிப்பில் குறிக்கவில்லை. -

இது நிற்க, சங்க விலக்கியங்களிலும் தொல் காப்பியத்திலும் தமிழர்களால் வழிபடப்பட்ட கடவுளர் பெயர்கள் காணப்படுகின்றன. இந்திரன், பிரமன், திருமால், முருகன், சிவன் ஆகிய கடவுளர் செய்திகளும் சங்க நூல்களில் குறிக்கப்படுகின்றன. இவர்களைப் பற்றிச் சங்க நூல்கள் குறிக்கும் வரலாறுகள் பின் வந்த திருமுறைகளிலும் புராணங் களிலும் காணப்படுகின்றன. சங்க காலத்துக்குப் பின் வந்த சிலப்பதிகாரத்திலும் சங்க நூல்களிற் காணப் பட்ட குறிப்புக்கள் உள்ளன. சங்கவிலக்கியத்துட்