பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

இந்நூல் வெளிவருகிறது. பல்வேறு இதழ்களிலும் மலர்களிலும் வெவ்வேறு காலகட்டங்களில் பல்லாண்டுகளுக்கு முன்னர் உரைவேந்தர் எழுதி வெளியிட்ட பதினாறு கட்டுரைகள் இதில் இடம் பெற்றுள்ளன. என் அருமைத் துணைவியார் தமிழரசி குமரவேலன் அவர்கள் தம் அண்ணன் அறிஞர் ஒளவை நடராசன் அவர்களைக் கண்டு பெற்றிருந்த கருவூலத்தை என்பால் காட்டினார். சிறந்த முறையில் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து, வரிசைப்படுத்தி வைத்திருந்த அத்தொகுப்பில் சில கட்டுரைகளைத் தெரிவு செய்து தந்தேன். கட்டுரைகளை அழகுற வெளியிட்டிருக்கும் வள்ளுவர் பண்ணைப் பதிப்ப கத்தையும் உரிமையாளர் உயர்திரு. பழநியப்பன் அவர்களையும் தமிழுலகம் என்றும் பாராட்டி மகிழும். உரைவேந்தர் அவர்களோடு திரு. பழநி யப்பன் பழகிச் சில நூல்களை வெளியிட்ட தகுதியும் பூண்டவர். திரு. பழநியப்பன் அவர்கள் பதிப்பக உரிமையாளர் என்பதோடு உரைவேந்தர் ஒளவை, நாவலர், பாரதியார், பேரவைத் தலைவர் புலவர். கா. கோவிந்தன் ஆகிய பெருமக்களோடு இலக்கிய உணர்வோடு நண்பராகப் பேசிய நயனுடையவர். ஒரு காலத்தே நற்றிணை உரையை வெளியிடச் செய்த பரிவுடையவர். உரைவேந்தர் நூற்றாண்டு விழா நிகழும் இந்நாளைத் தொடர்ந்து சில நூல்களையும் வெளியிட முன்வந்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது.