பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 { ஒளவை சு. துரைசாமி

இவ்வாறிருக்கையில் மெய்கண்ட தேவர் தோன்றித் தத்துவாராய்ச்சியும் சிவவழிபாடும் சிவனடியார்களைப் பேணலுமாகிய மெய்கண்ட சைவநெறியைத் தாம் பாடிய சிவஞான போதத்தால் வெளியிடலானார். இதன்கண் சங்ககாலம் தொட்டு வந்த சிவவழிபாடும், நாவரசர் முதலியோரால் அருளிச் செய்யப்பட்ட வழிபாட்டு நெறிகளும், சேக்கிழார் முதலியோரால் வற்புறுக்கப்பட்ட சிவனடியார்ப் பேணலும் அமையக்கண்ட தமிழ் நன்மக்கள் அதனைப் பெரிதும் மேற்கொள்வா ராயினர். அக்காலத்தே சகலாகமபண்டிதராக விளங்கிய அருணந்தி சிவனார் தாமும் அதனை மேற்கொண்டு, இதற்குள் வடமொழியில் தோன்றி யுருவாய் விளங்கிய ஆகமக் கருத்துக்களை இயைத்துச் சிவஞான போதத்துக்குச் சிவஞான சித்தியென்னும் பெயரால் உரையெழுதினார்.

இக்காலத்தே சங்கரரால் நிறுவப்பட்ட வேதாந்த மெனப்படும் சமயமும் இராமானுசர் நிறுவிய வைணவ சமயமும் நாட்டில் தக்க இடம் பெறலாயின. சைவநெறிக்குள்ளே கொள்கை வேறு பாட்டால் பல அகச் சமயங்கள் தோன்றின. இதனால், சமய நூல்கள் பலவும் புறமத மறுப்பும் தன்மத நிறுப்புமாகிய நெறிகளில் எழுதப்படுவன வாயின. பண்டு தொட்டே நிலவிச் சிறந்து வந்த சைவநூல்கள் பல, வடமொழியில் புகுந்துவிடவே தமிழரிடையே நிலவுந்திறம் இழந்தன. இக்காலத்தே