பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 இ ஒளவை சு. துரைசாமி

இந்நிலையில் அரசியலில் பெருங்குழப்பங்கள் உண்டாயின. வடுக வேந்தரும், முகமதிய மன்னரும் ஆங்கிலர் முதலிய மேனாட்டவரும் தம்முள் போராடி நிற்க, பெருஞ்செல்வ நிலையங்களாக இருந்த கோயில்கள் செல்வாக்குடையார் அவர் வழி நிற்கும் பண்டிதர் ஆகிய இவர்தம் கைவசமாயின. பொது மக்கட்கும் கோயில்களுக்கும் தொடர்பு. நெருக்கமாக உண்டாகாவண்ணம், கோயில் நிகழ்ச்சிகள் முழுதும் வடமொழியில் உண்டாயின. திருமுறையோதுவோர். திருப்பதிகம் விண்ணப்பஞ் செய்வோர் முதலியோர் விலக்கப்பட்டனர் சுருங்கச் சொல்லுமிடத்து, தமிழ்நாட்டுத் தமிழர்கோயிலுள் தமிழ்மொழி விலக்கப்பட்டது. கோயிலில் உள்ள கடவுட்கும், கோயில்களுள்ள ஆர்கட்கும் வட மொழிப் பெயர்கள் உண்டாய் விட்டன. வடமொழி பறியாத தமிழருள் மக்கட் டொகை மிகுதியும் செல்வாக்கும் இல்லாதார் தாழ்த்தப்பட்டோரும் ஒதுக்கப்பட்டோருமாய் விலக்குண்டொழிய, கோயில்கள் தீய தொழில்கட்கும் செல்வக் களியாட்டுகளுக்கும் இடங்களாயின.

தமிழருள் கோயில்கட்குச் சென்று வழிபடும் தகுதி பெற்றோர்க்கு ஆகமங்களிற் கூறப்படும் தத்துவங்களும் சிவபேத சத்திபேதங்களும் மந்திர வகைகளும் புவன வகைகளும் நடைமுறையில் பயிலப்பட வேண்டும் என்ற கருத்தால், தீக்கைகளும் சந்திமந்திரங்களும் சிவ பூசைகளும் வடமொழியில்