பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 71

அங்கே கிடைக்கும் ஒள்ளிய முத்துக்கள் அதனைக் காட்டி மகிழ்வதுபோல் ஒளி செய்கின்றன.

அதனை,

“விடமுண்ட மிடற்றண்ணல்

வெண்காட்டில் தண்புறவின் மடல்விண்ட முடத்தாழை -

மலர்நிழலைக் குருகென்று தடமண்டு துறைக் கெண்டை

தாமரையின் பூமறையக் கடல்விண்ட கதிர்முத்தம்

நகைகாட்டும் காட்சியதே.

ஒரு பொழிலில் மயில் ஆடுவதும், கடல் முழங்கு வதும், வண்டு பாடுவதும் ஓர் இசையரங்கு போல் இன்பம் செய்கின்றன. இதனை,

கண்மொய்த்த கருமஞ்ஞை

நடமாடக் கடல் முழங்க

விண்மொய்த்த பொழிவரிவண்

டிசைமுரலும் வெண்காடே

என்று பாடிக்காட்டுகின்றார்.

10, இறுதியாக, நெய்தற் காட்சியை சீர்காழிப் பதியோடு முடிக்கின்றேன். (1) வாழை வளமாகக் கனிந்திருப்பது கண்ட மந்தி உண்ணவிரும்பி நின்று நோக்க, அதன்கனம் தாங்காமல் இலை மட்டை கீழிறங்கவே, மாட்டாமல் குரங்கு தவிக்கிறது.