பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 77

விளங்கு கதிரே போல், மலருமருள்நீக்கியார் வந்தவதாரம் செய்தார்” என்பது அவரது கூற்று. உலகில் வருகின்றி இருளை நீக்கி ஒளி விளங்கத் தோன்றும் ஞாயிறு போல, நாட்டில் விரிந்த மருட்சி நீக்கித் தெருட்சி விளங்கத் திருநாவுக்கரசர் தோன்றினார் என்பது இதன் கருத்து. மருள் என்பது, பொருளல்லவற்றைப் பொருள் என்றுணர்வது என்பர் திருவள்ளுவர். பரம் பொருளாகிய சிவத்தையல்லது பிறவற்றைப் பரம் எனக் கருதும் மருள் அந்நாளில் பரவியதனால், அம்மருளை நீக்கிச் சிவமே பரம் எனக் காட்டுவர் என்று உணருமாறு அத்தொடர் நிற்பது காணலாம். எனவே சிவத்தைத் தெளியக் கண்டுணர்த்தும் திறம் திருநாவுக்கரசர் பால் அவர் தோன்றும் போதே உடன் தோன்றியது என்று காட்டுவது போல மருணிக்கியார் என்ற திருப்பெயர் வலியுறுத்துகிற தன்றோ?

இனி, பொருளல்லவற்றைப் பொருளென உணரும் மருள் எப்போது தோன்றுகிறது? பொரு ளல்லவற்றுள் மூழ்கித் திளைக்கிறபோது, அவை பொருளெனத் தோன்றுகின்றன; அறிவும் மருளு கிறது. அம்மருட்சி தெளியும்போது தான் பொருளென மயங்கியவை பொருளல்ல என்பது விளங்குகிறது. அதற்கொப்பவே, மருள் நீக்கியார் தம்மைப் பெற்ற தந்தை தாயரை இழந்து பெருமருட்சியுற்றுத் தம் தமக்கையின் துணையால் ஒருவாறு தெளிவு பெறுகிறார். “பட்ட காலிலே படும்