பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் இ 95

சிவமுமாகி வந்தனன் பயனுமாகி” என்று அறிவிக் கின்றார். இதனால் தெளிந்த சிந்தையில் சிவம் தோன்றி இன்பம் செய்யும் என்பது இனிது விளங்குவது காணலாம்.

S

முன்நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார் தம் நெஞ்சம் தமக்குத்தாம் இலாதவர்; வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே”

என்று தெரிவிப்பது காண்க.

மேலும், இதன்கண், தன் நெஞ்சு தனக்கேயாக, தன் வழி நிற்பதாக நிறத்திக் கொண்டவழி மூர்க்கத் தன்மை கெடும்; அது போதாது; அதன்கண் சிவனைக் காணவேண்டும்; அக்காட்சியால் நெஞ்சம் வன்மை நீங்கி மென்மையும் கசிவும் பெறும்; அதுபற்றியே ‘வன்னெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே” என்று இசைக்கின்றார். மென்மையால் நன்மை யெய்திய நெஞ்சில் இறைவன் எழுந்தருளுகிறான் என்பதற்குச் சான்று வேறு வேண்டா என்பார், “என் நெஞ்சில் ஈசனைக் கண்டது என் உள்ளமே” என்று எடுத்துரைக்கின்றார்.

உடம்பு முழுதும் கண்ணுக்குத் தெரியாத துவாரங்கள் நிறைந்ததாயினும், இதனுள் இருக்கும் மனத் தாமரையில் சிவபரம் பொருள் இருப்பான்; அவனை அதன் கண் வீற்றிருக்கக் காணலாம்; அவனை வானவர் முதலிய பலர்க்கும் காண்பரியன்