பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 இ. ஒளவை சு. துரைசாமி

என்பர்; மற்றுயானோ, என் நெஞ்சத் தாமரையில் நன்கு கண்டேன் என்பாராய்,

அள்ளலைக் கடக்க வேண்டில்

அரனையே நினைமின் நீர்கள் பொள்ளல் இக்காயம் தன்னுள் புண்டரீகத்திருந்த வள்ளலை வானவர்க்கும்

காண்பரிதாகி நின்ற துள்ளலைத் துருத்தியானைத்

தொண்டனேன் கண்டவாறே”

என்று உரைக்கின்றார்.

இங்ஙனம் சிந்தையிற் சிவனைக் காண்டற்கு வழியாது? நம் சமய குரவரான நாவுக்கரசர், அதனைக் கூறாமல் இல்லை. ‘கொள்வோன் கொள்கைவகையறிந்து நல்லறிவு கொளுத்தும் ஞானாசிரியராதலால், சிவபரம்பொருளைச் சிந்தை யிற் காண்டற்கெனத் திருக்கன்றாப்பூர்த்தாண்ட கத்தில்

விடிவதுமே வெண்ணிற்றை நிறையப் பூசி

வெளுத்தமைத்த கீளொடு கோவணமும் தற்று செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றும்

செங்கதிக்கு வழிகாட்டும் சிவனே என்றும் துடியனைய இடைமடவாள் பங்கா என்றும்

கடலைதனில் நடமாடும் சோதி என்றும்