பக்கம்:தமிழ்ச்சொல் விளக்கம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் சொல் விளக்கம்

7


7. ரகரமெய், தனி உயிர்க்குற்றெழுத்தின் பின்னாவது, தனி உயிர்மெய்க் குற்றெழுத்தின் பின்னாவது நில்லாது. றகர மெய் அவ்வாறு நிற்கும். (உதாரணம்) உற்றார் கற்றார் குறிப்பு:- அர்ச்சனை, கர்ப்பம், தர்ப்பை, என்பன வடசொற்கள். அவை, தமிழ் இலக்கண நூற்படி, அருச்சனை, கருப்பம், தருப்பை என்றாகும். 8. றகர மெய்க்குப்பின் மெய்யெழுத்துவராது; உயிர்மெய் எழுத்தே வரும், ரகர மெய்க்குப்பின் மெய்யும் வரும், உயிர்மெய்யும் வரும். (உதாரணம்) (அ) கற்கண்டு, கற்சிலை, சிற்பம். (ஆ) ஆர்க்கும், அயர்ச்சி தேர்வு 9. றகரம் தமிழ் மொழிக்கே சிறப்பானது. ரகரம் பல மொழிகளுக்கும் பொதுவானது. (உதாரணம்) பிராமணர் (வடமொழி) அலமாரி (போர்த்துக்கேசியம்) கரம் - குடு இந்துஸ்தான) பிரின்ஸிபால் தலைவர் இங்கிலீஷ்) 10. றகரம் வரப்பெற்ற தமிழ்ச்சொற்கள் அழுத்தமான ஒசையினையுடையனவாய் இருக்கும். ரகரம் வரப்பெற்ற