பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

107


காய் கதிர்ச் செல்வனே! நீ அறிய என் கணவன் கள்வனோ? சொல்! ஒரு குரல் : மாதே! நின் கணவன் கள்வனல்லன்' அவனைக் கள்வனென்ற இ வ் வூ ைர த் தி உண்ணும்.' t \ கண்ணகி : கேளுங்கள்; ந ன் றா க க் கேளுங்கள். நீதிமுறை பிறழ்ந்த பாண்டிய நாட்டில் வாழும் பத்தினிப் பெண்டிரே, கேளுங்கள். என் கணவன் கள்வனல்லன். இதோ, இச்சிலம்பு அச்சிலம்பின் இணை. சிலம்பொன்றை விற்று இன்புற்று வாழ எண்ணிய என் காதலர் அவ்வழியிலேயே துன்புற்று மாள நேர்ந்தது இவ்வுலகில் எவரும் பெறாத துயரத்தை இன்று நான் பெற்று விட்டேன். விலை கொடாமல் சிலம்பைக் கைப்பற்ற எண்ணியே எங்காதலர்க்குக் கள்வன் என்ற பெயரையுமிட்டுக் கொன்றிருக்க வேண் டும். இதோ செல்லுகிறேன். என் காதற் கணவனைக் காண்பேன். கண்டு, அவன் வாயில் தீதற்ற நல்லுரையைக் கேட்பேன். அவ்வாறு கேளேனாயின், நீங்கள் என்னை இகழுங்கள். (எனக் கூறிக் கண்ணகி விரைந்து செல்கிறாள்.

பலர் தொடர்ந்து செல்லுகிறார்கள்.1

காட்சி : 2

வீதி [மதுரை வீதி, மக்கள் الشماتة பெண்-1 : ஐயோ! அம்மா! என்ன அலங்கோலமாய் ஒடு

கிறாள்? - பெண்-2 : பாவம்! இப்பெண்ணுக்கா நேர்ந்தது இக் கொடுமை? பிழைக்கவந்த நாட்டில் சாவு! யாரால் சகிக்க முடிரும்?