பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

தமிழ்ச் செல்வம்


உங்களுக்கு ட்ரபில் குடுக்கிறதுக்காக ரொம்ப மன்னிக்கணும் சார். எக்ஸ்கியூஸ்மி. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை; சொல்லுங்கள். படா சமாச்சார் ஒண்னுமில்லே பாபு! எஸ் சார்...ஒரு சின்ன மேட்டர் !... மேட்டராவது வாட்டராவது! விஷயமின்னு சொல்லுங்களேன் பாபு...உஸ்தாத் p! நீங்களே சொல்லுங்க. இங்க்லீஸ்வாலா நம்ம தேசத்தை விட்டுப் போயி எத்தனை வருஷமாச்சு அந்த பாஷை நமக்கெதுக்கு?

சார், பிளீஸ் ஒன் மினிட்!...டிச்சர் சார்! இவரு இந்தி இந்தீன்னு உயிரை விடுகிறாரே! இந்த லாங்க்வேஜிலே என்ன சார் இருக்கு? ஹிந்தி நம்ம இந்தியாவின் தேசீய பாஷை!. நோ.நோ...இங்க்லீஷ் வொர்ல்ட் கிரேட் லாங்க் வேஜ்! - மை போல்தா பாபு... அதான் அடிமைப் புத்தீண்ணு. வாட் நான்சென்ஸ்! யார், யார் அடிமை?...

வேண்டாம் நண்பர்களே, சண்டை வேண்டாம்.

ஆங்கிலத்திற்காகவும், இந்திக்காகவும் சண்டை போடும் நீங்கள் தமிழை மறந்து விட்டீர்களே! இது முறையா?...உலகமொழியென்றும், பொது மொழியென்றும் போராடித் தாய்மொழியாகிய தமிழைப் புறக்கணிக்க முயல்வது தவறல்லவா?

தமிழ் என்ன பாபு ஊட்லே தினமும் பேசறது தானே. தானா வருது...இந்தி நம்ம பரதகண்டத் துக்கே பொது பாஷை, அதைப் படிக்கலேண்ணா: இந்தியன்னு எப்படி பாபு சொல்லிக்கறது?