பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

தமிழ்ச் செல்வம்


வாயிலைக் காப்போனே! கேள்; நீதி இழந்த மன்னனிடம் கணவனிழந்த பெண் ஒருத்தி, கையிற் சிலம்பேந்தி, காண வந்திருப்பதாகக் கூறு.

வாயி : அப்படியே ஆகட்டும் தாயே! இதோ சொல்லுகிறேன்...வாழ்க! மன்னர் மன்னவா, வாழ்க கோட்டை வாயிலின் கீழ்ப்புறத்தில் கொற்றவை போன்ற பெண் ஒருத்தி, கையிற் சிலம்பொன்றை ஏந்திக் கடுஞ்சினத்துடன் காத்திருக்கிறாள். அரசரைக் காணவேண்டுமாம்.

நெடு : அப்படியானால், உடனே வரச் சொல்.

கோப்: நாதா! யாரை வரச் சொல்லுகிறீர்? இரவிற்கண்ட தீக்கனா இன்னும் என் உள்ளத்தை வருத்திக் கொண்டிருக்கிறது. என்ன நேரிடுமோ தெரிய வில்லை!

நெடு : கோப்பெருந்தேவி! குறையொன்றுமில்லை. வருந் தாதே. கவலையை ஒழித்திரு. (கண்ணகி வருகிறாள்) இரு கண்களிலும் நீரொழுக வந்து நிற்கும் இளங் கொடியே! நீ யார்? எந்த ஊர்?

கண்ணகி : தேரா மன்னா! செப்புகிறேன் கேள் : கன்றை இழந்த பசுவொன்று கதறிப் பதறி, குற்றம் அறிவிக்கும் ம ணி ைய க் கொம்பாலாட்டி அறிவித்து, கண்ணிருகுத்து நிற்கும் காட்சி தன்னுள்ளத்தை வருத்தியதால், தானே தன் மகனைத் தேர்க்காலிலிட்டுக் கொன்று, நீதியை நிலைநிறுத்திய சோழ மன்னன் வாழ்கின்ற காவிரிப் பூம்பட்டினமே எனது ஊர். அவ்வூர் வணிகப் பெருங்குடியில் மாசாத்து வானின் மகனாகப் பிறந்து வாழ விரும்பி ஊழ்வினை துரத்த நின் நகர் வந்து, என் காற் சிலம்பை விலைகூறித் திரிந்து, நின்னால் கொலையுண்ட கோவலன் மனைவி நான்; என் பெயர் கண்ணகி.