பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

தமிழ்ச் செல்வம்


பதற்கு என்ன உண்டு? யானும் பின் தொடர் வேன், நின் காலடியில் வீழ்ந்து...(விழுகிறாள்.)

கண்ணகி : (சினம் தணிந்து) பாண்டிமாதேவி! நின் காற் சிலம்பு களவுபோய், என் கணவனைக் கொன்று எனக்குத் துன்பம் விளைவித்தது; என் காற் சிலம்பு உடைந்து போய் நின் கணவனைக் கொன்று உனக்குத் துன்பம் விளைவித்தது. ஆனாலும் ஒன்று நின் கணவன் தவறிழைத்து உயிர் துறந்தான். என் கணவனோ தவறு செய்யாது உயிர் துறந்தான். நான் தீவினை யுடையவள். ஒன்றும் அறியாதவள். என் மீது குற்றமொன்றுமில்லை. மு ற் ப க லி ல் என் கணவனுக்குக் கேட்டை விளைவித்த நின் கணவன், பிற்பகலில் தானே அக்கேட்டுக்கு ஆளானான். இது உலக நெறி. இதற்காக நீ என்மீது வருந்தாதே!

பணிப்பெண்கள் : ஐயய்யோ! அரசியும் இ ற ந் து

விட்டாள். - கண்ணகி : ஆ! அரசியும் உயிர் பிரிந்தாளா? மன்னவன் உயிரைத் தன் உயிர் கொண்டு தேடுகிறாள் போலும் ஆ! அவள் பத்தினிப் பெண்! இறந் தான் கணவன் என்றதும், இறந்தாள்! நான் ஏன் உயிர் வாழ்கிறேன்? என் வயிறு எரிகிறது; என் நெஞ்சம் எரிகிறதே! ஆம் அரண்மனைப் பொருள்களெல்லாம் எரிகின்றனவே; இனி இங்கு எனக்கொரு வேலையுமில்லை. வெளியேற வேண்டியதே. (நெருப்பு நெருப்பு என்று பணிப்பெண்களின்

அலறல்.) - கண்ணகி : (வெளியில் வந்து) உள்ளிலும் நெருப்பு! வெளியிலும் நெருப்பு! வீதியிலும் நெருப்பு! நகரிலும் நெருப்பு நாட்டிலும் நெருப்பா? ஒ!