பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பு

123


கனக விசய : அப்படியே உ று தி கூறுகின்றோம். அறியாமையால் செய்த பிழைக்கு மன்னிப்பும் வேண்டுகிறோம்.

செங் : நாங்கள் இங்கு வந்தது போரிட மட்டுமல்ல. கற்பரசியாகிய கண்ணகி தேவிக்குக் கல் நாட்டவு மாகும். ஆகவே, இமயத்தின் கல் ஒன்றை நீங்கள் இருவரும் தலையில் சுமந்து வந்து, தமிழ்நாட்டில் சேர்ப்பிக்க வேண்டும்.

கனக விசய : அரசர்க்கரசே! அவ்வாறே செய்வோம், அதை எங்கள் பெரும் பேறாகவும் கருதுவோம்.

செங் : அமைச்சரே! கயற்கொடிக்கும் புலிக்கொடிக்கும்

மேலே விற்கொடியும் பொறித்தாயிற்றோ?

அமை : ஆயிற்று அரசே!

செங் : புத்தினித் தெய்வத்தின் வடிவம் அமைப்பதற் குரிய இக்கல்லைப் பாதுகாப்பாகக் கொண்டுவர வேண்டும், வரும்வழியில் கங்கையிலும், காவிரி யிலும் நீராட்ட வேண்டும். கற்பரசியை வணங்கு வதற்கு ஏற்ற கோவில் ஒன்று அமைக்க நான் முன்னதாகச் செல்கிறேன். நீங்கள் விரைவாக வந்து சேருங்கள்.

[குதிர்ை ஏறிச் செல்லுகிறார்கள்) ஒருவர் : சேர மன்னர்.

பலர் : வாழ்க!

(எல்லோரும்)

வெற்றி முழக்குவோம்

வெற்றி முழக்குவோம் வெற்றி, வெற்றி, வெற்றி என்று வெற்றி முழக்குவோம்! (வெற்றி)