பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக முடிவு

தமிழாசிரியர் வீடு

[முதற் காட்சியின் தொடர்ச்சி]

தமிழாசிரியர் : பார்த்தீர்களா அன்பர்களே, தமிழில் உள்ள செல்வங்களை?

இந்தி நாகரிகர் : பார்த்தோம் பாபு! பார்த்தோம்! இதிலே உள்ள படா சமாச்சார் என்ன பாபு?

தமிழாசிரியர் : பிச்சையெடாமல் பசியற்று வாழும் மக்களைக் கொண்டதே நாடு பிறர் பொருளைத் தவறியும் பெறாதவர்களே மக்கள்! ஒழுக்கம் ஒன்றே உயர்ந்த செல்வம்! உடல் பிரிந்தாலும், உளம் பிரியாததே காதல்! பழி கலந்து வாழ்வதை விட உயிர் பிரிந்து வாழ்வதே வீரம். தமிழுக்குப் பயன்படுமானால் த ைல யு ங் கொடுப்பதே கொடை! இல்லை யென்று வருபவர் முன் 'இல்லையென்று கூறுவதே இழிவு சிறிய காரியங்களில் முயன்று வெற்றி பெறுவதைவிட, பெரிய காரியங்களில் முயன்று தோல்வியடை வதே சிறப்பு! பாராட்டுதற்கு மட்டுமல்லவணக்கத்திற்கும் உரியது கற்பு என்பதே! இவை யனைத்தும் தமிழ் காட்டும் செல்வங்கள்.

ஆங்கில நாகரிகர் : (இந்த நாகரிகரிடம்) என்ன மிஸ்டர் , நமக்கும் பர்த் கண்ட்ரி டமில் நாட்தான். நம்பளும் டமிலியன் இன்னுதான் சொல்லிக் கொள்கி றோம், சொல்லி என்ன செய்யறது? நம்ம மதர் டங்க்லே இவ்வளவு கிராண்டு ஐடியாஸ் இருக்குனு அறியாமப் போனோமே!