பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தமிழ்ச் செல்வம்


ஆங் : டீச்சர் சார்; டமில் ரூல் பண்ண முடியுமா. ரூல்?... தமி : என்ன, டமில் ரூலா?

இந் : தேசத்தை நிர்வாகம் பண்ண தமிழ் பாஷையாலே முடியுமாண்ணு கேட்கிறார். நியாயமான கேள்வி.

தமி ஏன் தமிழாலே நாடாள முடியாது?... நாடு ஆண்டது தமிழ்மொழிதானே! தமிழாலே நாடாள முடியுமா வென்று என்னையேன் கேட்கிறீர்கள்! கலிங்கத்தைக் கேளுங்கள்; சிங்களத்தைக் கேளுங் கள் பர்மாவைக்கேளுங்கள்; மலேயாவைக் கேளுங் கள், ஜாவாவைக் கேளுங்கள்; கங்கையைக் கேளுங் கள்: இமயத்தைக் கேளுங்கள்-அவை சொல்லும், தமிழ் நாடாண்ட வரலாற்றை.

ஆங் : இஞ்சினிரிங் ஆர்ட் தமில்லே உண்டா சார்? பில்டிங் கட்ட முடியுமா உங்க தமிழ் படிச்சுட்டு...

தமி : ஐயோ! கண்ணிருந்தும் குருடராய் வாழுகிறீர் களே! கட்டடக் கலை தமிழுக்குண்டாவென்றா கேட்கிறீர்கள்? என்னைக் கே ட் கா தி ர் க ள். வானளவு உயர்ந்து, தமிழரின் கட்டடக்கலை நுணுக்கத்தைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் கோபுரங்களைக் கேளுங்கள். ஆலயங்களைக் கேளுங்கள் ... மேனாட்டார் கண்டுவியக்கும் கல்லணையைக் கேளுங்கள்...தமிழரின் கட்டட்க் கலைத் திறனை அவை சொல்லும்.

ஆங் : சார், நீங்க என்னதான் சொல்லுங்க, ஒரு ஷேக்ஸ் பியர், மில்டன், ஷெல்லி...ஆஹா பியூட்டி புல் விட்ரச்சர்! தமில்லே என்ன சார் இருக்கு?

தமி : தமிழில் என்ன இல்லை? எல்லாம் இருக்கிறது! - நீங்கள் படிக்கவில்லை. பல மொழிகளையும் கற் றறிந்த உலக அறிஞர்களிற் பலர் தமிழைக் கற்று மிகமிகப் பாராட்டியிருக்கின்றனர். தமிழ் நன்